கணவனை பிரிய விநோதமான காரணத்தை முன்வைத்த மனைவி! இதெல்லாம் பிரச்னையென்று சொன்னால் எப்படிமா?

மத்தியபிரதேசத்தில் கணவனை பிரிய மனைவி விநோதமான காரணத்தை முன்வைத்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் நகரை சேர்ந்தவர் விஷால் மோகியா(24). கடந்த ஆண்டு இவருக்கு திருமணம் ஆகியுள்ளது. விஷால் மோகியா,…

மத்தியபிரதேசத்தில் கணவனை பிரிய மனைவி விநோதமான காரணத்தை முன்வைத்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் நகரை சேர்ந்தவர் விஷால் மோகியா(24). கடந்த ஆண்டு இவருக்கு திருமணம் ஆகியுள்ளது. விஷால் மோகியா, கருப்பாக இருப்பதால்,  மனைவி அவரை தொடர்ந்து கிண்டல் செய்து வந்துள்ளார். மேலும், கருப்பு நிறத்தை காரணம் காட்டி தொடர்ந்து அவருடன் சண்டை போட்டு வந்துள்ளார்.

விஷால் மோகியாவின் மனைவிக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், குழந்தையை கணவனின் வீட்டில் வைத்துவிட்டு அந்த பெண், தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். மனைவியை அழைத்து வருவதற்காக அவரது வீட்டிற்கு விஷால் மோகியா சென்றபோது, நிற பிரச்னையை காரணம் காட்டி கணவருடன் செல்ல மறுத்துவிட்டார்.

இதையும் படியுங்கள் : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – கைதான 11 பேருக்கு 5 நாட்கள் போலீஸ் காவல்!

இதையடுத்து விஷால் மோகியா காவல்நிலையத்தில் இதுதொடர்பாக புகார் அளித்துள்ளார். அதில், தான் கருப்பு நிறமாக இருப்பதால் மனைவி தன்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக வரும் 13ம் தேதி  இருவரையும் அழைத்து கவுன்சிலிங் கொடுக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். திருமணமாகி ஒரு குழந்தை உள்ள நிலையில், நிறத்தை காரணம் காட்டி கணவனை மனைவி பிரிந்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.