முதலிரவில் இளம்பெண்ணுக்கு பாலியல் சித்ரவதை: கணவன் மீது புகார்

நாகை அருகே இளம்பெண் முதலிரவில் கணவனால் பாலியல் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறி  மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.  நாகப்பட்டினம் மாவட்டம் தொழுதூரைச் சேர்ந்த  ராஜ்குமார் என்பவருக்கும் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரைச் சேர்ந்த…

நாகை அருகே இளம்பெண் முதலிரவில் கணவனால் பாலியல் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறி  மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

நாகப்பட்டினம் மாவட்டம் தொழுதூரைச் சேர்ந்த  ராஜ்குமார் என்பவருக்கும் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரைச் சேர்ந்த பெண்ணுக்கும், கடந்த 26 ஆம் தேதி ஆலத்தம்பாடியில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்காக 12 பவுன் நகை மற்றும் கட்டில் மெத்தை, பீரோ, இருசக்கர வாகனம் என சீர்வரிசைகளும் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.  மேலும் அன்று இரவு இருவருக்கும் மாப்பிள்ளை ராஜ்குமார் வீட்டில் முதலிரவு நடைபெற்றபோது,  ராஜ்குமார் சைக்கோ போல் நடந்து கொண்டு அந்த பெண்ணை பாலியல் சித்ரவதைக்கு உள்ளாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதில் உடல் முழுவதும் ரத்த காயங்கள் ஏற்பட்டு புதுமணப்பெண்  மயக்கம் அடைந்துள்ளார். மேலும் அவர் பெண்ணல்ல திருநங்கை எனக்கூறி சத்தமிட்டு கொண்டே வீட்டில் இருந்து ராஜ்குமார் வெளியேறியதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்ணின் உறவினர்கள் முதலிரவு அறைக்கு சென்று பார்த்துள்ளனர். அங்கு ரத்த காயங்களுடன் புதுமணப்பெண் மயக்கமான நிலையில் காணப்பட்டுள்ளார்.

அவரை மீட்ட உறவினர்கள் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் இது குறித்து நாகப்பட்டினம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தங்கள் புகார் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அந்த பெண்ணின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதையடுத்து  பாதிக்கப்பட்டபெண்ணின் தாய் மற்றும் உறவினர்கள் இன்று நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகரை சந்தித்து மனு அளித்தனர். இளம் பெண்ணிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட ராஜ்குமார், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது  தாயார் மீது வழக்கு பதிவு செய்து உடனடியாக அவர்களை கைது  செய்ய வேண்டுமென  புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜ்குமார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால்,   எஸ் பி அலுவலகம் முன்பு தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொள்வேன் என பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர்  எச்சரித்தார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.