துப்பாக்கி முனையில் பெண்ணிடம் நகை பறிக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் துப்பாக்கி முனையில் பெண்ணிடம் நகை பறிக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. டெல்லியின் ரோகினி நகர் பகுதியில் அமைந்துள்ள கடைக்கு பெண் ஒருவர் சென்று கொண்டிருந்தார்.
https://twitter.com/ChaudharyParvez/status/1647165607249612800?s=20
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அந்த பெண்ணை கீழே தள்ளிவிட்டு துப்பாக்கி முனையில் நகையை பறித்துச் சென்றனர். அந்த கடையில் இருந்த நபர் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு, உடனடியாக அவரை காப்பாற்ற வெளியே ஓடி செல்கிறார். முகமூடி கொள்ளையர்கள் கைகளில் துப்பாக்கியுடன் இருந்து உள்ளனர்.
இதனை பார்த்து, மிரண்டு போன அந்த நபர் மீண்டும் கடைக்குள் ஓடுகிறார். இது தொடர்பான சிசிடிவி காட்சியைக் கொண்டு டெல்லி போலீசார் கொள்ளையர்கள தேடி வருகின்றனர்.







