தேனி மலைப்பாதையில் பற்றி எரியும் காட்டுத் தீ; வாகன ஓட்டிகள் கடும் அவதி…

தேனி மாவட்டம் போடி மெட்டு மலைப்பாதையில் பற்றி எரியும் காட்டுத்தீயால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். தேனி – கொச்சின் நெடுஞ்சாலையில் போடிமேட்டு பகுதியில் காட்டு தீ ஏற்பட்டுள்ளது. தீ விபத்தால்…

தேனி மாவட்டம் போடி மெட்டு மலைப்பாதையில் பற்றி எரியும் காட்டுத்தீயால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

தேனி – கொச்சின் நெடுஞ்சாலையில் போடிமேட்டு பகுதியில் காட்டு தீ ஏற்பட்டுள்ளது. தீ விபத்தால் 100-க்கும் மேற்பட்ட ஏக்கர் மரங்கள், செடிகள், முலிகைகள் தீக்கிரையாகி வருகின்றன.

நான்கு மற்றும் ஐந்தாவது கொண்டை ஊசி வளைவுக்கு நடுவே சாலையை மறைக்கும் அளவிற்கு கடும் புகைமூட்டம் ஏற்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

இதுவரை காட்டுத்தீயை அணைக்க வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டும் அந்த பகுதி மக்கள் காட்டுத்தீயை உடனடியாக அணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.