முக்கியச் செய்திகள் செய்திகள் சினிமா

’நாட்டு… நாட்டு..’ பாடலை வீணையில் வாசித்து அசத்திய பெண் – வைரல் வீடியோ

ஆஸ்கர் விருது வென்றுள்ள பாடலை வீணையில் வாசித்து ஸ்ரீவானி அசத்தியுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகியுள்ளது.

ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆரின் கச்சிதமான நடனத்தால் உலகளாவிய நாட்டு நாடு பாடல் பிரபலமாக மாறியது. இந்தப் பாடலுக்கு எம்எம் கீரவாணி இசையமைத்துள்ளார். சந்திரபோஸ் எழுதியுள்ளார், மேலும் பிரேம் ரக்ஷித் நடனம் அமைத்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஆஸ்கர் விருதுக்குள் நுழைவதற்கு முன், ஜனவரி மாதம் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான கோல்டன் குளோப்ஸ் விருதையும், சிறந்த பாடலுக்கான விமர்சகர்களின் சாய்ஸ் விருதையும் நாட்டு நாட்டு பாடல் வென்றது. சில நாட்களுக்கு முன்பு, ஹாலிவுட் கிரிட்டிக்ஸ் அசோசியேஷன் விருதுகளில் நடனப் பாடலுக்கு சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான விருது வழங்கப்பட்டது.

அண்மைச் செய்தி: திமுக எம்.பி திருச்சி சிவா வீடு மீது திடீர் தாக்குதல் – திருச்சியில் பரபரப்பு

இந்நிலையில் இந்த பாடலை தனது வீணையில் அசத்தியுள்ளார் வீணை கலைஞர் ஸ்ரீவானி. இதுதொடர்பாக தனது ட்வீட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஆர்ஆர்ஆர் படக்குழுவினருக்கு வாழ்த்துகள். சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் முதல் முறையாக இந்திய படத்தின் பாடல் ஆஸ்கர் விருதை பெற்றுள்ளது. இது மிகப் பெரிய பெருமை” என்று பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இதுவரை 5400 லைக்குகளை பெற்றுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்ற 4 பேர் கைது!

EZHILARASAN D

நகராட்சி, மாநகராட்சிகளுக்கு கூடுதல் அதிகாரம்- அரசாணை வெளியீடு

G SaravanaKumar

விஞ்ஞான ஊழலின் பிறப்பிடம் திமுக- அண்ணாமலை

G SaravanaKumar