தடையை மீறி பூங்கா பகுதியில் நாயை அழைத்துச் சென்றதாக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தனது குடும்பத்தினருடன் மத்திய லண்டனில் உள்ள ஹைட் பூங்காவுக்குச் சென்றுள்ளார். அப்போது, தனது வளர்ப்பு நாயையும் உடன் அழைத்துச் சென்றுள்ளார். அந்தப் பூங்கா பகுதியில் நாயை அழைத்து வரக் கூடாது என்றும், நாயை முறையாக வழிநடத்திச் செல்ல வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால், அதை மீறி ரிஷி சுனக் தனது வளர்ப்பு நாயை பூங்காவில் விட்டுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையும் படிக்க: ’நாட்டு… நாட்டு..’ பாடலை வீணையில் வாசித்து அசத்திய பெண் – வைரல் வீடியோ
அப்போது அங்கிருந்த அதிகாரி ஒருவர் பூங்காவில் நாய்களை வழிநடத்துவதற்கான வழிமுறைகளை நினைவுபடுத்தியதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அந்த நாய் அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. ஏற்கனவே ரிஷி சுனக் கொரோனா கட்டுப்பாட்டை மீறி விருந்தில் பங்கேற்றது, காரில் சீட் பெல்ட் அணியாமல் பயணித்தது போன்ற சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.
-ம.பவித்ரா