பாஜக ஆதரவின்றி எந்த அரசியல் கட்சியும், தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது, என்று பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கருத்து தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய அவர், பாஜக தமிழகத்தில் காலூன்ற முடியாது என்று, பிற அரசியல் கட்சியினர் கூறிவந்த நிலையில், தற்போது பாஜக வேரூன்றி உள்ளதாக குறிப்பிட்டார். தமிழகத்தில் 65 லட்சம் குடும்பங்களுக்கு, இலவச எரிவாயு இணைப்புகள் மத்திய அரசால் தரப்பட்டுள்ளது, என்றும் எல்.முருகன் கூறினார்.
தமிழகத்தில் விவசாயிகள் வங்கி கணக்கில் 6 ஆயிரம் ரூபாய் அளிக்கப்பட்டுதாகவும், அவர் தெரிவித்தார். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி ஆலயத்தில் உள்ள 22 புனித தீர்த்தங்களிலும், பக்தர்கள் நீரான அனுமதி அளிக்க வேண்டும், என்றும் எல்.முருகன் கேட்டுக் கொண்டார். மேலும், தமிழகத்தின் பல்வேறு இடங்களில், பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.







