முக்கியச் செய்திகள் விளையாட்டு

விம்பிள்டன் டென்னிஸ்: 4வது சுற்றுக்கு முன்னேறிய ஜோகோவிச்

விம்பிள்டன் டென்னிஸ் தொடரில், அமெரிக்க வீரரை வீழ்த்தி நட்சத்திர வீரர் ஜோகோவிச் 4வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

கிராண்ட்லாம் பட்டங்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டன் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் மூன்றாம் சுற்று போட்டியில், செர்பியாவைச் சேர்ந்த உலகின் நம்பர் ஒன் நட்சத்திர வீரர் ஜோகோவிச்சும், அமெரிக்க வீரர் டெனிஸ் குட்லாவும் மோதிக் கொண்டனர். விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில், 6க்கு 4, 6க்கு 3 மற்றும் 7க்கு 6 என்ற நேர் செட் கணக்கில் டெனிஸ் குட்லாவை வீழ்த்தி ஜோகோவிச் வெற்றிபெற்றார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த வெற்றியின் மூலம், ஜோகோவிச் 4வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். நாளை மறுநாள் நடைபெறும் போட்டியில், சிலே வீரர் கிறிஸ்டியன் கேரினுடன் அவர் மோதுகிறார். இந்த போட்டியில் வெற்றிபெறும் வீரர் காலிறுதிக்கு தகுதி பெறுவார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மீண்டும் களமிறங்கும் அம்பாசிடர் கார்

G SaravanaKumar

நயன்தாராவின் மாய நிழல் ட்ரெய்லர் வெளியீடு

G SaravanaKumar

‘சின்னக் கலைவாணர் விவேக் சாலை’ திறப்பு

Arivazhagan Chinnasamy