காதலர் தினத்தை முன்னிட்டு நாளை ‘விடாமுயற்சி’ அப்டேட் வெளியாகுமா..?

நாளை காதலர் தினத்தை முன்னிட்டு விடாமுயற்சி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கும் திரைப்படம் விடாமுயற்சி.  லைகா தயாரிப்பில் பிரம்மாண்டமாக…

நாளை காதலர் தினத்தை முன்னிட்டு விடாமுயற்சி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.

அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கும் திரைப்படம் விடாமுயற்சி.  லைகா தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் நடைபெற்றது. ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகும் இந்தப் படத்திற்காகப் பெரிய பட்ஜெட்டை ஒதுக்கியிருந்தது லைகா.

அதுமட்டும் இல்லாமல் அஜித்துடன் அர்ஜுன், த்ரிஷா, ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பல மல்டி ஸ்டார்களும் இப்படத்தில் நடித்துள்ளனர்.  அஜித்தின் 62-வது படமான இதனை விக்னேஷ் சிவன் தான் இயக்குவதாக இருந்தது.  ஆனால்,  கடைசி நேரத்தில் விக்னேஷ் சிவன் விலகியதால் அவருக்குப் பதிலாக மகிழ் திருமேனி கமிட்டானார்.

இதனால் இந்தப் படத்தின் ஷூட்டிங் ஏற்கனவே பிளான் செய்து வைத்திருந்ததை விட தாமதமாக தொடங்கியது.  ஆனாலும் படப்பிடிப்பை பிரேக் விடாமல் அடுத்தடுத்த ஷெட்யூல்களில் எடுத்து வந்தார் மகிழ் திருமேனி.  இதுவரை முடிந்த விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் முழுவதும் அஜர்பைஜானில் தான் எடுக்கப்பட்டது.  இந்த நிலையில் இப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வந்த ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. ப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி விட்ட நிலையில் மார்ச் மாதத்தோடு படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் தொடங்க உள்ளது. இந்த நிலையில் நாளை காதலர் தினத்தை முன்னிட்டு விடாமுயற்சி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இப்படத்தின் டைட்டில் அறிவிப்புக்கு பிறகு எந்த புதிய அப்டேட்டும் வெளியாகாமல் இருந்த நிலையில் தற்போது பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் தகவல் அஜித் ரசிகர் வட்டாரத்தை உற்சாகப்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.