நடிகர் ரஜினிகாந்த் ஆளுநரை சந்தித்த நிகழ்வு தேநீர் விருந்தாகத்தான் இருக்கலாம் நான் புகைப்படத்தில் தேநீரை மட்டும்தான் பார்த்தேன் என்று காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள கடியாப்பட்டியில் 75வது சுதந்திர தின பவள விழாவை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற பாதை யாத்திரையை தொடங்கி வைத்த பின் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் பேட்டி அளித்தார்.
ப.சிதம்பரம் தலைவர் ஆவாரா என்று செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த அவர் கூறியதாவது:
சோனியா காந்தி உள்ளவரை காங்கிரஸ் கட்சியின் தலைவர் அவர் தான். பீகாரில் அவர்களுக்கு உள்ளாகவே ஏற்பட்ட பூசல். இது இந்தியா முழுவதும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என்று சொல்ல முடியாது. பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை இதுபோல் மாறிக் கொள்வார்.
தமிழக நிதியமைச்சர் கார் மீது காலணி வீசிய சம்பவம் பற்றி கேள்விப்பட்டேன். அதுபோல கலாச்சாரம் தமிழ்நாட்டில் கூடாது. இத்தகைய அநாகரிகமான செயலை வன்மையாக கண்டிக்கிறேன் என்றார் கார்த்தி சிதம்பரம்.








