முக்கியச் செய்திகள் தமிழகம்

பேருந்தில் உயிரிழந்த மனைவி; பணம் இல்லாமல் தவித்த கணவருக்கு உதவிய போலீசார்

அரசு பேருந்தில் சொந்த ஊருக்கு சென்ற போது பேருந்திலேயே மனைவி உயிரிழந்த நிலையில், செய்வதறியாது தவித்த கணவருக்கு காவல் துறையினர் உதவினர்.

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பகுதியைச் சேர்ந்தவர் அருணாச்சலம், இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், சென்னை அடுத்த பம்மலில் வீடு வாடகைக்கு எடுத்துத் தங்கி மரக்கடை மற்றும் ஹோட்டலில் வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் செல்விக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். செல்வியின் சிகிச்சையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் சொந்த ஊரான களக்காடுக்கு செல்ல முடிவெடுத்து மருத்துவமனையில் இருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு ஆட்டோவில் வந்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கோயம்பேட்டில் இருந்து திருநெல்வேலி வரை செல்லும் அரசு விரைவுப் பேருந்தில் ஏறி அமர்ந்துள்ளனர். பேருந்தும் புறப்பட்டு சிங்கபெருமாள் கோவில் அருகே வந்த போது நடத்துநர் பயணச்சீட்டு வழங்கி வந்துள்ளார். அப்போது செல்வி மயங்கிய நிலையில் இருந்ததை கண்டு அவரது கணவரான அருணாசலத்திடம் கேட்டுள்ளார். அதற்கு அருணாச்சலம் தனது மனைவி மயங்கிய நிலையில் இருப்பதாகவும் சற்று நேரத்தில் எழுந்து விடுவார் எனக் கூறி உள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த நடத்துநர் உடனடியாக 108 ஆம்புலன்ஸிற்கு தொடர்பு கொண்டு இதுகுறித்து கூறியுள்ளார். இதனிடையே பேருந்தும் செங்கல்பட்டு சுங்கச்சாவடி வந்தடைந்தது. அங்கு வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் செல்வியை பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. உடனடியாக செங்கல்பட்டு தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலறிந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து செல்வியின் உடலை ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால், அருணாச்சலத்திடம் போதிய அளவு பணம் இல்லாததால் செங்கல்பட்டு தாலுகா ஆய்வாளர் அசோகன் தனியார் ஆம்புலன்ஸை ஏற்பாடு செய்து அதற்கான பணத்தையும் கொடுத்து செல்வியின் உடலை சொந்த ஊரான களக்காடுக்கு அனுப்பி வைத்தார்‌‌.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

திருநங்கை கொலை வழக்கு: கல்லூரி மாணவர் கைது

G SaravanaKumar

’விவசாய பிரதிநிதிகளுக்கும் நியமன எம்.பி பதவி வழங்க வேண்டும்’ – பி.ஆர்.பாண்டியன்

Arivazhagan Chinnasamy

வேற லெவல் பாடல் காட்சியாமே.. புனே-வில் ஷங்கர் பட ஷூட்டிங்!

Halley Karthik