மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் 200 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிப்பெற்றது.
இரு அணிகள் இடையேயான கடைசி போட்டி TRINIDAD மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து, முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 351 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக சுப்மன் கில் 85 ரன்கள், இஷான் கிஷன் 73 ரன்கள் எடுத்தனர். அதிரடியாக விளையாடிய ஹர்திக் பாண்டியா ஆட்டமிழக்காமல் 52 பந்துகளில் 70 ரன்கள் எடுத்தார். 352 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
பெரும்பாலான வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னுடன் பெவிலியன் திரும்பினர். 9வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த அல்ஜாரி ஜோசப், குடகேஷ் மோட்டி இருவரும் 55 ரன்கள் சேர்த்தனர். இறுதியில், அந்த அணி 151 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 200 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று, 2க்கு ஒன்று என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.







