அதிருப்தி எம்.பி.களுக்கு அழைப்பா…? அனைத்து கட்சி கூட்டத்திலிருந்து திரிணமுல் காங்கிரஸ் வெளிநடப்பு…!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு நடைபெற்று வரும் அனைத்து கட்சி கூட்டத்திலிருந்து திரிணமுல் காங்கிரஸ் வெளிநடப்பு செய்துள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை (ஜூலை 20) தொடங்க உள்ளது. இதனை முன்னிட்டு இன்று நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது. மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான இக்கூட்டத்தில் கூட்டத்தொடரில் அரசு கொண்டு வரப்போகும் மசோதாக்கள் குறித்து விவாதம் நடைபெறுகிறது.

இந்த நிலையில் அனைத்து கட்சி கூட்டத்தில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெளிநடப்பு செய்துள்ளது. திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி பிரிவினருக்கு அழைப்பு விடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சி வெளிநடப்பு செய்தது.

இது தொடர்பாக திரிணாமூல் எம்.பி. சௌகதா ராய், அங்கீகரிக்கப்படாத ஒரு கட்சி, அதுவும் (நாடாளுமன்ற) இணையதளத்தில் பெயர் இல்லாத ஒரு கட்சி, அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருப்பது தான் எங்கள் கவலை என்று தெரிவித்தார்.

2026 தேர்தல் தோல்வியை தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் அதிருப்தி குழுக்கள் உண்டாகியுள்ளன. இந்த அதிருப்தி குழுவைச் சேர்ந்த சுமார் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த மாதம் இந்திய தேசியவாத குடிமக்கள் கட்சியுடன் இணைந்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.