கர்நாடக பாஜக அரசின் ஊழலுக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை – பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி கேள்வி

கர்நாடக பாஜக அரசின் ஊழலுக்கு எதிராக பிரதமர் மோடி ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் நாளை மறுநாள் நடைபெறுகிறது. இன்று மாலையுடன் தேர்தல் பரப்புரை நிறைவடையும்…

கர்நாடக பாஜக அரசின் ஊழலுக்கு எதிராக பிரதமர் மோடி ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் நாளை மறுநாள் நடைபெறுகிறது. இன்று மாலையுடன் தேர்தல் பரப்புரை நிறைவடையும் நிலையில், பெங்களூருவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, உணவு விநியோக நிறுவன ஊழியர்களுடன் கலந்துரையாடினார். தொடர்ந்து அவர்களுடன் அமர்ந்து மதிய உணவு அருந்திய அவர், உணவு டெலிவரி செய்யும் ஒருவரின் இருசக்கர வாகனத்தில் அமர்ந்து சிறிது தூரம் பயணித்தார்.

பின்னர், காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய ராகுல்காந்தி, கர்நாடக பாஜக அரசு ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்ததாக குற்றம்சாட்டினார். இரட்டை என்ஜின் கொண்ட மத்திய அரசு, ஊழல் பணத்தில் பெற்ற தொகை குறித்து பிரதமர் மோடி கூற வேண்டும் என்று தெரிவித்த அவர், கடந்த 4 ஆண்டுகளில் ஊழலுக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கேள்வி எழுப்பினார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.