ஜெயலலிதா குறித்து நீலிக்கண்ணீர் வடிக்கும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மணிப்பூர் பெண்கள் நிலை குறித்து பேச மறுப்பது ஏன் என முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பேராவூரில் திமுக தென்மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறைக் கூட்டம் நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு திமுக அரசு செய்த திட்டங்களை பட்டியலிட்டார். தமிழ்நாட்டை திமுக தான் நிரந்தரமாக ஆள வேண்டும் என்ற முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் கனவை நிறைவேற்றுவோம் எனவும் அவர் சூளூரைத்தார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர், ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பிரதமர் மோடி அளித்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை என குற்றம் சாட்டினார். 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜகவிற்கு முற்றுப்புள்ளி வைப்போம் எனவும் அவர் கூறினார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து நீலிக்கண்ணிர் வடிக்கும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, மணிப்பூர் பெண்களின் நிலை குறித்து பேச மறுப்பது ஏன் என்றும் முதலமைச்சர் கேள்வி எழுப்பினார்.
இந்தியாவை காப்பாற்றுவது I.N.D.I.A. கூட்டணி தான் எனக்கூறிய முதலமைச்சர், நாடாளுமன்ற தேர்தல் கூட்டணியை தாம் பார்த்துக் கொள்வதாகவும், களப்பணியை நீங்கள் பார்த்து கொள்ள வேண்டும் என தொண்டர்களை கேட்டுக்கொண்டார்.