ஃப்லிப் போன்கள் சந்தையில் வரவேற்பை பெறாதது ஏன்?

மடக்கக்கூடிய செல்போன்கள் மீண்டும் சந்தைக்கு வந்துகொண்டிருக்கும் நிலையில் விலையின் காரணமாக மக்கள் வாங்குவதற்கு ஆர்வம் காட்டத் தயங்குகின்றனர். மடக்கக்கூடிய செல்போன்கள் தற்போது மீண்டும் சந்தைக்கு வந்து கொண்டிருக்கின்றன. சமீபமாக சாம்சங், மோட்டோ, ஓப்போ, ஒன்…

மடக்கக்கூடிய செல்போன்கள் மீண்டும் சந்தைக்கு வந்துகொண்டிருக்கும் நிலையில் விலையின் காரணமாக மக்கள் வாங்குவதற்கு ஆர்வம் காட்டத் தயங்குகின்றனர்.

மடக்கக்கூடிய செல்போன்கள் தற்போது மீண்டும் சந்தைக்கு வந்து கொண்டிருக்கின்றன. சமீபமாக சாம்சங், மோட்டோ, ஓப்போ, ஒன் பிளஸ் நிறுவனங்கள் புதிய மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளன. ஆனால் மக்கள் இப்போது மடக்கக்கூடிய செல்போன்களில் ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. ஏனெனில் அதன் விற்பனை மிகவும் குறைவாக உள்ளது. 2023ல் மடக்கக்கூடிய செல்போன்களின் விற்பனை வெறும் 1.8% மட்டுமே, அதாவது 6.35 லட்சம் மட்டுமே விற்பனை ஆகியுள்ளதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.

ஆண்ட்ராய்டு போன்கள்தான் தற்போது அதிகளவில் பயன்பாட்டில் இருக்கின்றன. ஆனால், மடக்கக்கூடிய இந்த செல்போன்கள் கையடக்கத்தில் இருக்கும் என்பதால் நாம் எளிதாகக் கையாள முடியும். பாக்கெட்டில் வைத்துக்கொள்ள முடியும். மேலும் அவற்றைத் திறந்தால் பெரிய திரை தோன்றும். பயன்படுத்தும்போது ஆண்ட்ராய்டு போன் தோற்றமளிக்கும்.

அடுத்ததாக, கீழே தவறி விழுந்தாலும் எளிதில் உடையாது, செல்போன் திரை பாதுகாப்பாக இருக்கும். ஆண்ட்ராய்டு போன்களைவிட இதன் பேட்டரி திறன் அதிகம் என்றும் நிறுவனங்கள் கூறுகின்றன. இதில் உள்ள ஒரே ஒரு எதிர்மறை விஷயம் என்னவென்றால், இதன் விலைதான். ஆண்ட்ராய்டு போன்கள் 10,000 ரூபாய்க்கே ஓரளவு சிறப்பம்சங்களுடன் கிடைக்கும்பட்சத்தில் மடக்கக்கூடிய செல்போன்கள் ரூ.50,000-க்கு மேல்தான் விற்கப்படுகின்றன.

சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சாம்சங் கேலக்சி இசட் பிலிப்(8 ஜிபி + 256 ஜிபி) விலை ரூ. 99,999. மோட்டரசர் 40 அல்ட்ராவின் விலை ரூ. 89,999. இதர நிறுவனங்களின் மடக்கக்கூடிய போன்களும் இதே விலையை ஒத்திருக்கின்றன. எனவே சாதாரண மக்கள் வாங்கக்கூடியதாக பிளிப் போன்கள் இல்லை என்பதே இதன் குறைவான விற்பனைக்குக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.