எதற்காக பொதுக்குழு நடத்த அனுமதி – நீதிபதியின் முழு தீர்ப்பு

அதிமுக பொதுக்குழுவை நடத்தலாம் என சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. எதற்காக பொதுக்குழுவுக்கு அனுமதி வழங்கப்பட்டது என முழு விவரங்களை தற்போது பார்க்கலாம்.   அதிமுகவில் பொதுக்குழு நடத்த தடை கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பில்…

அதிமுக பொதுக்குழுவை நடத்தலாம் என சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. எதற்காக பொதுக்குழுவுக்கு அனுமதி வழங்கப்பட்டது என முழு விவரங்களை தற்போது பார்க்கலாம்.

 

அதிமுகவில் பொதுக்குழு நடத்த தடை கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்கு இன்று காலை 9 மணிக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அதிமுக பொதுக்குழு நடத்த எந்த தடையும் இல்லை என உத்தரவிட்டார். மேலும் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்.

 

மேலும் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி வழங்கிய தீர்ப்பில், சட்டப்படி பொதுக்குழு கூட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி விட்டது. அதற்கு முரணாக உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டிருந்தது. சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடத்த வில்லை என்றால் உச்சநீதிமன்றம் தான் அந்த உத்தரவின் பாதுகாவலர் என்ற அடிப்படையில் உச்ச நீதிமன்றம் தான் பரிசீலீக்க முடியுமே தவிர உயர் நீதிமன்றம் அல்ல.

 

பொதுக்குழு கூட்டத்தை கூட்ட கூடாது என்ற கோரிக்கையை தவிர வேறு எந்த இடைகால நிவாரணமும் ஓ.பி.எஸ் தரப்பில் கோரப்படவில்லை. பொதுக்குழு கூட்டம் சட்டப்படி கூட்டப்பட மாட்டாது என்று ஓ.பி.எஸ் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்காதது ஏன் என தெரியவில்லை. எனவே உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் பொதுக்குழு கூட்டத்தை கூட்ட அனுமதி வழங்க உயர் நீதிமன்றம் தயங்கவில்லை.

 

2 ஆயிரத்து 665 பொதுக்குழு உறுப்பினர்களில் 2 ஆயிரத்து 190 பேர் கேட்டுக்கொண்டதினங்க ஜூலை 11 பொதுக்குழு கூட்டம் நடத்த ஜூன் 23
அறிவிக்கப்பட்டது. எனவே 15 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டதாகவே கருத முடியும். ஜனநாயகத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பம் தான் மேலோங்கி
இருக்கும்.

பெரும்பான்மையனரின் விருப்பத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது. கட்சி உறுப்பினர்களின் நம்பிக்கையை பெற முடியாதவர்கள் நீதிமன்றங்களை ஒரு கருவியாக தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துகின்றனர். ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் கட்சியின் மூத்த தலைவர் உறுப்பினர்களை சமாதானம் செய்து கட்சி நலன் மற்றும் வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் உறுப்பினர்களின் நம்பிக்கையை பெரும் வகையில் பொதுக்குழுவை அனுகுவதை விடுத்து ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தை நாடுகிறார்.

 

நீதிமன்றத்தின் மூலமாக சாதிக்க முயற்சிக்கிறார். பொதுக்குழுவில் தங்கள் குறைகளுக்கு நிவாரணம் கிடைக்காவிட்டால் உரிமையியல் நீதிமன்றத்தை அனுகலாம். சிறந்த நிர்வாகத்துக்காக கட்சி விதிகளை வகுக்கும் விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடாது. ஓ.பி.எஸ் இடைக்கால மனுவை ஏற்க முடியாது. எனவே ஓபிஎஸ் மற்றும் வைரமுத்து மனுகளை தள்ளுபடி செய்து உத்தரவிடுவதாக அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.