பிரதமர் மோடி யார் கையை உயர்த்தினாலும் வெற்றி உறுதி! – எல்.முருகன்

பிரதமர் மோடி யார் கையை உயர்த்தினாலும் வெற்றி உறுதி, என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். மதுரை கோச்சடை பகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் 21ம் தேதி சேலத்திற்கு பாதுகாப்புத்துறை அமைச்சர்…

பிரதமர் மோடி யார் கையை உயர்த்தினாலும் வெற்றி உறுதி, என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

மதுரை கோச்சடை பகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் 21ம் தேதி சேலத்திற்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், வரும் 25ம் தேதி கோவைக்கு பிரதமர் மோடியும் வருகை தரவுள்ளதாக கூறினார். தமிழக சட்டப்பேரவை தேர்தலை, பாஜக முக்கிய தேர்தலாக நினைத்து பணியாற்றி வருவதாக கூறிய அவர், அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் பாஜக, இரட்டை இலக்கத்தில் வெற்றி பெற்றிடும் எனவும், நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும், சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோல் விலை குறையும், என்று கூறிய எல்.முருகன், பிரதமர் மோடி கையை உயர்த்திப் பிடித்த அனைவரும் வெற்றி பெற்றுள்ளதாகவும், தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply