“யார் பின்னால கூட்டம் சேருதோ, அவன் ரொம்ப ஆபத்தானவன்” – வெளியானது லால் சலாம் டிரைலர்!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி, நடிகர் ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடிக்கும், லால் சலாம் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடந்த 2012-ம் ஆண்டு தனது கணவராக இருந்த நடிகர்  தனுஷ் நடிப்பில் வெளிவந்த…

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி, நடிகர் ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடிக்கும், லால் சலாம் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடந்த 2012-ம் ஆண்டு தனது கணவராக இருந்த நடிகர்  தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘3’ படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து 2015-ம் ஆண்டு கௌதம் கார்த்திக் நடிப்பில் ”வை ராஜா வை” என்ற படத்தை இயக்கினார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் மூன்றாவது திரைப்படமான லால் சலாம் படத்தின் அறிவிப்பு வெளியானது. கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து, எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை லைகா நிறுவனம்  பிரமாண்டமாக தயாரித்துள்ளது. இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் எங்கிற கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் உள்ளிட்டோர் கதையின் நாயகர்களாக நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இந்த படத்தின் படிப்பிடிப்பு மும்பை, புதுச்சேரி, திருவண்ணாமலை போன்ற பல்வேறு இடங்களில் நடைபெற்றது. இந்த படம் வரும் பிப். 9-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (பிப். 05) இந்த படத்தின் டிரைலர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. 5 மணிக்கு வெளியாக இருந்த இந்த டிரைலர் 7 மணிக்கு வெளியாகும் என மாற்றப்பட்டது. ஆனால் 9.30 மணிக்கு லால் சலாம் படத்தின் டிரைலர் வெளியானது. உணர்ச்சி பொங்க வசனங்கள் இடம் பெற்றுள்ளன. 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.