“இங்க யாரு போலீஸ்… யாரு அக்கியூஸ்டுனே தெரியல” – மிரட்டும் #Sorgavaasal படத்தின் டிரெய்லர்!

ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ள ‘சொர்கவாசல்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. கடந்த 2010-ஆம் ஆண்டு ரேடியோ ஜாக்கியாக அறிமுகமான ஆர்.ஜே பாலாஜி, 2013ம் ஆண்டு முதல் தமிழ் திரைப்படங்களில் சிறுசிறு கதாப்பாத்திரங்களில் நடிக்க தொடங்கினார். 2015 ஆம்…

ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ள ‘சொர்கவாசல்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

கடந்த 2010-ஆம் ஆண்டு ரேடியோ ஜாக்கியாக அறிமுகமான ஆர்.ஜே பாலாஜி, 2013ம் ஆண்டு முதல் தமிழ் திரைப்படங்களில் சிறுசிறு கதாப்பாத்திரங்களில் நடிக்க தொடங்கினார். 2015 ஆம் ஆண்டு நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த ‘நானும் ரவுடி தான்’ திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் நண்பராக நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் மனதை கவர்ந்தார்.

இதனைத் தொடர்ந்து, புகழ், ஜில் ஜங் ஜக், தேவி போன்ற திரைப்படங்களில் நடித்தார். 2019 ஆம் ஆண்டு வெளியான LKG திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். 2020ம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளிவந்த ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இதன் தொடர்ச்சியா நடிகர் சூர்யாவின் 45வது படத்தை இயக்குகிறார். இதனிடையே இயக்குநர் பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக இருந்த சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் ஆர்ஜே பாலாஜி ‘சொர்கவாசல்’ என்னும் படத்தில் நடித்துள்ளார்.

இதில் நட்டி, சானியா ஐயப்பன், ஷரஃப் உதீன், ஹக்கீம் ஷா, பாலாஜி சக்திவேல், கருணாஸ் உட்பட பலர் நடித்துள்ளனர். இயக்குநருடன் இணைந்து எழுத்தாளர் தமிழ் பிரபா, அஸ்வின் ஆகியோர் படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதியுள்ளனர். படத்திற்கு கிறிஸ்டோ சேவியர் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இப்படம் வரும் நவ.29ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.