முக்கியச் செய்திகள் தமிழகம்

பெட்ரோல் விலையை குறைப்பதில் யார் முனைப்பு காட்டுகிறார்கள் – மு.க.ஸ்டாலின்

பெட்ரோல் விலையைக் குறைப்பதில் உண்மையிலேயே யார் முனைப்பு காட்டுகிறார்கள், யார் பெட்ரோல் விலையைக் குறைப்பது போல நடித்து பழியை மற்றவர்கள் மீது போடுகிறார்கள் என்பதை மக்களுடைய முடிவிற்கே விட்டு விடுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார்.

சட்டப்பேரவையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்பாக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்து பேசினார். அப்போது, மாநில அரசுகள் விதிக்கக்கூடிய வரிகளை மாநில அரசுகள் குறைக்காத காரணத்தால்தான் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாட்டில் குறைக்க முடியவில்லை என்று பிரதமர் நேற்றைக்குக் குறிப்பிட்டுக் காட்டியிருப்பதை சுட்டிக்காட்டினார். ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்று சொன்னால், முழுப் பூசணிக்காயை சோற்றிலே மறைப்பது போல், பிரதமர் சொல்லியிருப்பதாக மு.க.ஸ்டாலின் சாடினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததிலிருந்து, கச்சா எண்ணெய்யின் விலை பெருமளவு சரிந்தபோது, அதற்கேற்றாற்போல பெட்ரோல் மற்றும் டீசல் விலையைக் குறைக்காமல், அந்த எண்ணெய் விலை வீழ்ச்சியால் கிடைத்த உபரி வருவாய் முழுமையும் ஒன்றிய அரசு தனதாக்கிக் கொண்டதாகவும், பெட்ரோல் மற்றும் டீசல் மேல் விதிக்கப்படக்கூடிய மத்திய கலால் வரியானது, மாநில அரசுகளோடு பகிர்ந்து அளிக்கக்கூடியது என்ற காரணத்தால், அதனைக் குறைத்து மாநில அரசுகளுக்குப் பகிர்ந்து அளிக்கப்படும் வருவாயில் கை வைத்தது ஒன்றிய அரசுதான் என குற்றம்சாட்டினார்.

சில மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது என்ற ஒரே காரணத்திற்காக பாசாங்கு காட்டுவதுபோல இந்தத் தேர்தலுக்கு முன்பாக பெட்ரோல் மற்றும் டீசல் மீது விதிக்கப்படும் வரிகளைக் ஒன்றிய அரசு குறைத்ததாகவும், ஆனால், தேர்தல் முடிந்து வெற்றி பெற்ற பின்பு, தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டவாறு மக்கள் நலன் கருதி, நிதிநிலைமையையும் பொருட்படுத்தாமல், ஒன்றிய அரசு குறைப்பதற்கு முன்பாகவே, பெட்ரோல் மீது விதிக்கப்படும் மாநில வரியைக் தமிழ்நாடு அரசு குறைத்ததாகவும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.

இவையனைத்தும் தமிழ்நாடு மக்களுக்கு நன்றாகவே தெரியும் என சுட்டிக்காட்டிய மு.க.ஸ்டாலின், யார் பெட்ரோல் விலையைக் குறைப்பதில் உண்மையிலேயே முனைப்பு காட்டுகிறார்கள்; யார் பெட்ரோல் விலையைக் குறைப்பது போல நடித்து பழியை மற்றவர்கள் மீது போடுகிறார்கள் என்பதை மக்களுடைய முடிவிற்கே தான் விட்டு விடுவதாகவும் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு; அமைச்சர் தகவல்

Halley Karthik

திருவள்ளூரில் பள்ளி விடுதியில் மாணவி உயிரிழப்பு-விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்

Web Editor

விமானப்படை வீரர் துப்பாக்கியால் சுட்டு உயிரிழப்பு

G SaravanaKumar