பெண்களை இழிவாக பேச திமுகவினருக்கு யார் உரிமை கொடுத்தது என குஷ்பு தெரிவித்துள்ளார்.
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக உள்ள நடிகை குஷ்பூ குறித்து பொதுமேடையில் அவதூறாக பேசிய திமுக உறுப்பினர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் பேச்சை கண்டித்து சென்னை ஆர்.ஏ புரத்தில் உள்ள தனது அலுவலகத்தில் நடிகை குஷ்பூ செய்தியாளர்களை சந்தித்தார். அவர் தெரிவித்ததாவது..
” திமுகவின் மூன்றாம் கட்ட பேச்சாளர் என்னை பற்றி கேவலமாக, தரை குறைவாக பேசியுள்ளார். பெண்களை அசிங்கப்படுத்துவதும், கேவலமாக பேசுவதும் புது திராவிட மாடல் என்று நான் புரிந்து கொள்கிறேன். ஒரு மகளிர் ஆணைய உறுப்பினராக நான் இருக்கும் பொழுது என்னை பற்றி கேவலமாக பேசும்போது, போனால் போகட்டும் என்று விட்டு விட்டால், நம்ம நாட்டில் உள்ள மற்ற பெண்களைப் பற்றி நினைத்துப் பாருங்கள்.
என்னைப் பற்றி அவதூறாக பேசும் போது அதை நான் தெரியாத மாதிரி விட்டு விட்டால், மற்ற பெண்கள் என்ன யோசிப்பார்கள். குஷ்புவை தனிப்பட்ட முறையில் ஒருவர் தாக்கியுள்ளார் என்பதற்காக நான் செய்தியாளர்களை சந்திக்கவில்லை.
எந்த ஆணுக்கும் தனிப்பட்ட முறையில் ஒரு பெண்ணை பேச தகுதி கிடையாது.
திமுக இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். என்னை மட்டுமல்ல எந்த பெண்களைப் பற்றியும் இனி அவர்கள் பேசக்கூடாது. நான் இன்று நேரடியாக முதலமைச்சரை பார்த்து சொல்கிறேன் . உங்க பதில் உங்கள் வார்த்தைகளில்தான் சொல்கிறேன். குஷ்புவை சீண்டு பாக்காதீர்கள். திருப்பி அடித்தால் தாங்க மாட்டீர்கள்
செந்தில் பாலாஜியை பற்றி திசை திருப்புவதற்காகவே இது போன்ற பேச்சுகளை தீனி போட்டு இவர்கள் வளர்க்கிறார்கள். சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க கிருஷ்ணமூர்த்தி ஒன்றும் பெரிய ஆள் கிடையாது. இது போன்ற பேச்சுக்களை பேசி திமுக கட்சியின் தலைவர் கலைஞரை அசிங்கப்படுத்துகிறார்கள்
இந்த விவகாரத்தை கட்சி ரீதியாக பார்க்காதீர்கள். உங்களுக்கு பெண்களைப் பற்றி இழிவாக பேச யார் உரிமை கொடுத்தது. பெண் ஒரு வீட்டின் குத்து விளக்கு ஏற்றி வைக்கும் மகாலட்சுமி. ஒரு பெண்ணை பற்றி தவறாக பேச தைரியம் வரக்கூடாது, வந்தால் திருப்பி அடிப்போம் இனி ஒரு பெண் பற்றி இழிவாக பேசினால் நான் சும்மா இருக்க மாட்டேன். செருப்பால் அடிக்கும் தைரியம் எனக்கு இருக்கு செருப்பால் அடிப்பேன்.ஆனால் நான் அடிக்க விரும்பவில்லை, எனது செருப்பு அழுக்காகி விடும்.
கடந்த முறை கனிமொழி மணிப்பு கேட்டார்கள் தற்போது சொல்லுங்கள். ஒரு பெண்ணை பற்றி பேச யாரு உங்களுக்கு யார் உரிமை கொடுத்தது. கலைஞர் இருந்த போது இருந்த திமுக வேறு தற்போது உள்ள திமுக வேறு. இது தான் புது திராவிட மாடல். நான் இன்று இப்படி பேசவில்லை என்றால் என் மகளுக்கு நான் எப்படி முன் உதாரணமாக இருப்பேன். என் அம்மா எனக்கு பால் மட்டும் கொடுக்கவில்லை தைரியம் கொடுத்து வளர்த்து இருக்கிறார்கள். பெண்ணைப் பற்றி பேசுவதற்கு எப்படி தைரியம் வந்தது. அவரும் ஒரு தாய்க்கு பிறந்தவன் தானே.” என குஷ்பு தெரிவித்தார்.







