தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக இன்று முதல் வரும் 19ம் தேதி வரை தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் 21ம் தேதி வரை மிதமான மழை தொடரும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதன்படி, அவ்வப்போது தமிழ்நாட்டில் ஆங்காங்கே மழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு சில தினங்களாக மழை கொட்டி தீர்த்தது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் இன்று (செப்.15) மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, கோவை ஆகிய மாவட்டங்களில் இன்று மாலை 4 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.







