வங்கக்கடலில் இலங்கை அருகே நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘டிட்வா’ புயலாக உருவானது. அது மேலும் தீவிரமடைந்து, அடுத்த 48 மணி நேரத்தில், ஆந்திரப் பிரதேச கடற்கரையை நோக்கி நகரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மணிக்கு 17 கி.மீ. வேகத்தில் வடமேற்கு நோக்கி நகர்ந்து வருவதாகவும், தற்போது சென்னைக்கு தென்கிழக்கே 730 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளதாகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணி வரை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, நாகப்பட்டினம் புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, சிவகங்கை, தென்காசி, விருதுநகர் ஆகிய 11 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.







