தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பெய்து வரும் நிலையில், நவம்பர் 2026 மாத தொடக்கம் முதலே பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழையே பெய்து வருகிறது. வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மாற்றங்கள் காரணமாகத் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைப்பொழிவு ஏற்பட்டு வருகிறது.
வளிமண்டல சுழற்சி காரணமாக மழை:
சுமார் 0.9 கிமீ உயரத்தில் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
15 மாவட்டங்களில் மழை:
இதன் காரணாமாக, தமிழ்நாட்டில் இன்று (நவம்பர் 10), இராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். மேலும், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.




