“#GOAT படத்தை பார்க்கும் போது ஒவ்வொரு 2 நிமிடத்திற்கு ஒருமுறை விசில் அடிப்பீர்கள்”- எதிர்பார்ப்பை எகிறவைத்த பிரேம்ஜி!

கோட் படத்தை பார்க்கும்போது ஒவ்வொரு 2 நிமிடத்திற்கு ஒருமுறை விசில் அடிப்பீர்கள் என நடிகர் பிரேம்ஜி தெரிவித்துள்ளார். லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படமான ‘கிரேட்டஸ்ட்  ஆஃப் ஆல் டைம்ஸ் படத்தை (GOAT…

"When you watch #GOAT you will whistle every 2 minutes" - Premji raised expectations!

கோட் படத்தை பார்க்கும்போது ஒவ்வொரு 2 நிமிடத்திற்கு ஒருமுறை விசில் அடிப்பீர்கள் என நடிகர் பிரேம்ஜி தெரிவித்துள்ளார்.

லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படமான ‘கிரேட்டஸ்ட்  ஆஃப் ஆல் டைம்ஸ் படத்தை (GOAT – Greatest Of All Times) வெங்கட் பிரபு  இயக்கியுள்ளார். இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபுதேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் வரும் செப்டம்பர் 5-ம் தேதி விநாயகர் சதுர்த்தியன்று வெளியாக உள்ளது. இது விஜய் அரசியலுக்கு வந்த பிறகு வெளியாகும் முதல் படமாகும். இதனால் விஜய் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு உள்ளனர்.

இப்படத்தின் பாடல்கள், டிரெய்லர் வெளியாகி படத்தின் மீதான ஆவலை அதிகரித்துள்ளது. இந்த சூழலில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் 4-வது பாடலான ‘மட்ட’ பாடல் நேற்று முன்தினம் வெளியானது. இப்பாடல் இணையத்தில் வைரலானது. படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி உள்ள நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் புரமோஷன் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

தமிழ்நாடு மற்றும் கேரளாவில் முதல்நாள் முதல் காட்சிகளைப் பார்க்க பலரும் போட்டிபோட்டு கொண்டு டிக்கெட் வாங்கி வருகின்றனர்.

இந்த நிலையில், நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் பிரேம்ஜி கோட் படம் குறித்து கூறியதாவது:

“கோட் படத்தை நான் பலமுறை பார்த்துவிட்டேன். நீங்கள் எதிர்பாராத பல விஷயங்கள் படத்தில் உள்ளன. ஒவ்வொரு 2 நிமிடத்திற்கு ஒருமுறையும் விசில் அடிப்பீர்கள். தமிழ் சினிமாவில் இதற்கு முன் இப்படியான ஆச்சரியங்களைப் பார்த்திருக்க மாட்டீர்கள். அறிமுக காட்சியே அசத்தலாக இருக்கும். படத்தைப் பார்த்து முடித்ததும் என் அண்ணனிடம் (வெங்கட் பிரபு) கோட் உலகளவில் ரூ. 1500 கோடி வரை வசூலிக்கும் என சொன்னேன். பார்ப்போம்.”

இவ்வாறு நடிகர் பிரேம்ஜி தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.