#Mettur-ல் புனல் மின் நிலையத்தின் முதல்கட்ட பணிகளை தொடங்கியது கிரீன்கோ நிறுவனம்!

சேலம் மாவட்டம் மேட்டூரில் ரூ.5947 கோடியில் கிரீன்கோ எனர்ஜிஸ் நிறுவனம் நீரேற்று புனல் மின் நிலையம் அமைக்கிறது. தமிழ்நாடு அரசு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் அதிக முதலீடுகளை ஈர்த்து வருகிறது. காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கு…

Greenko has started the first phase of Funal Power Station in #Mettur

சேலம் மாவட்டம் மேட்டூரில் ரூ.5947 கோடியில் கிரீன்கோ எனர்ஜிஸ் நிறுவனம் நீரேற்று புனல் மின் நிலையம் அமைக்கிறது.

தமிழ்நாடு அரசு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் அதிக முதலீடுகளை ஈர்த்து வருகிறது. காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையானது மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. அந்த துறையில் அதிகளவு முதலீடுகளை ஈர்ப்பதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனங்களில் ஒன்று கிரீன்கோ குழுமத்தைச் சேர்ந்த கிரீன்கோ எனர்ஜிஸ் நிறுவனம் ஆகும்.

இந்நிலையில், கடந்த 21-ம் தேதி சென்னையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் கிரீன்கோ நிறுவனத்துடன் ரூ.20,114 கோடி முதலீட்டில் 3 புனல் மின் நிலையங்களை அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது.இந்த 3 புனல் மின்நிலையங்கள் மூலம் 1,500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, சேலம் மாவட்டம் மேட்டூரில் ரூ.5947 கோடியில் கிரீன்கோ எனர்ஜிஸ் நிறுவனம் நீரேற்று புனல் மின் நிலையம் அமைக்கிறது.

இதையும் படியுங்கள் : “ப்ரியத்தோடு என் படைப்பையும் என் உழைப்பையும் தொடர்ந்து பாராட்டும் முதலமைச்சர் #MKStalin க்கு நன்றி” – மாரி செல்வராஜ்

இதனிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட 7 நாட்களில் முதல்கட்ட பணிகளை தொடங்கியது கிரீன்கோ எனர்ஜிஸ் நிறுவனம். அதன்படி, ரூ.5947 கோடி முதலீட்டில் மேட்டூரில் உள்ள பாலமலை மற்றும் நவிப்பட்டி ஆகிய கிராமங்களில் மின்நிலையம் அமைக்க கிரீன்கோ எனர்ஜிஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்கான கட்டுமான பணிக்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் கிரீன்கோ எனர்ஜிஸ் விண்ணப்பம் அளித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.