30.9 C
Chennai
May 13, 2024
முக்கியச் செய்திகள் தொழில்நுட்பம்

பெரிதும் எதிர்பார்க்கப்படும் ‘கூகுள் பிக்சல் 7a’ ஸ்மார்ட்போன்; இந்தியாவில் எப்போது ரிலீஸ்? எவ்வளவு விலை? – முழு விவரம்

கூகுள் பிக்சல் 7a ஸ்மார்ட்போனின் ஸ்பெக் கசிந்துள்ளன. மே 10 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் கூகுள் பிக்சல் 7a பற்றி பல வதந்தி பரவி வந்த நிலையில், வெளியான இந்த புதிய தகவல் பழைய விவரங்களை உறுதிப்படுத்துகிறது.

Pixel 7a ஆனது 6.1 இன்ச் OLED டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதன் டிஸ்ப்ளே கடந்த ஆண்டு Pixel 6a போலவே இருக்கும். டிஸ்ப்ளே முழு-எச்டி+ தெளிவுத்திறனை வழங்கும். சிறந்த கேமிங் மற்றும் ஸ்க்ரோலிங் அனுபவத்திற்காக மேம்படுத்தப்பட்ட 90 ஹெர்ட்ஸ் ரிஃப்ரஷ் ரேட்டை கொண்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கேமரா அமைப்பை 12.2 மெகாபிக்சல் கேமராவிற்கு பதிலாக புதிய 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா சென்சார் மூலம் மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பின்புற கேமரா இன்னும் 12 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 10.8 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவுடன் இருக்கும். இவை அனைத்தும் கூகுளின் புதிய டென்சர் G2 SoC மற்றும் 20W சார்ஜிங்குடன் 4,400mAh மூலம் இயக்கப்படும் என்று கூறப்படுகிறது. மென்பொருளில், பொருத்தவரை பிக்சல் 7a ஆனது ஆண்ட்ராய்டு 13 இல் இயங்கும்.

Pixel 7a மே 10 அன்று Google IO நிகழ்வில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் விற்பனை சில நாட்கள் அல்லது சில வாரங்களுக்குப் பிறகு நடைபெறும். கூகுள் தனது பிக்சல் 7 சீரிஸை தோராயமாக ரூ.41,000 விலை நிர்ணயம் செய்யலாம் என எதிர் பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading