விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் எப்போது வெளியாகும் ? – லேட்டஸ்ட் அப்டேட்…!

மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் குறித்த தகவல் வெளியாகிறது. விடாமுயற்சி படத்தில் நடிகர் அஜித்துடன் இணைந்து, திரிஷா, அர்ஜூன் உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர். இந்த திரைப்படத்தை லைகா…

மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் குறித்த தகவல் வெளியாகிறது.

விடாமுயற்சி படத்தில் நடிகர் அஜித்துடன் இணைந்து, திரிஷா, அர்ஜூன் உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர். இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, மகிழ்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார்.

இந்தபடத்தின் ஷூட்டிங் தொடங்கியது கடந்தாண்டு தொங்கி அஜர்பைஜானில் நடந்து வந்தது. இந்த நிலையில் ஹாலிவுட் ஸ்டைலில் விடாமுயற்சி படம் உருவாகி வருவதாக தகவல் வெளியான நிலையில், அஜர்பைஜானில் நடைபெற்று வந்த விடாமுயற்சி ஷூட்டிங் நிறைவடைந்ததாகவும், இன்னும் சில நாட்களில் விடாமுயற்சி படக்குழுவினர் வேறு இடத்திற்கு சென்று ஷூட்டிங் நடத்தவுள்ளனர் என்று நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்திருந்தார்.

வேறு நாட்டிற்கு விடாமுயற்சி படக்குழுவினர் செல்ல உள்ளன நிலையில் அது எந்த நாடு என்ற என்ற தகவல் விரைவில் வெளியாகும் என தெரிகிறது. இந்த நிலையில், மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வரும் பிப்ரவரி மாதம் 2 வது வாரத்தில் வெளியாகும் என தகவல் வெளியாகிறது. இப்படத்தமுழு படப்பிடிப்பு நிறைவு பெற்று வரும் ஏப்ரல் இறுதியில் இப்படம் தேதி ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகிறது. இதனால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.