முக்கியச் செய்திகள் தமிழகம்

ஆசிரியர் தகுதி தேர்வு எப்போது? அறிவிப்பு வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்

அரசுப் பள்ளிகள், கல்லூரிகளில் காலியாக உள்ள 10,371 ஆசிரியர்கள், பேராசிரியர்கள், பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியிடங்களுக்கான வருடாந்திர தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பாணை செப்டம்பரில் வெளியிடப்படும்; டிசம்பரில் தேர்வு நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதர பணியிடங்களுக்கு அரசாணை வெளியிடப்பட்ட உடன் அறிவிப்பாணை வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு 2020, 2021-ம் ஆண்டுகளில் நடத்தப்படாத நிலையில், கடந்த மார்ச் மாதம் அறிவிப்பு வெளியானது. தற்போது தேர்வுக்கான உத்தேச தேதி குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

2022-ம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக கடந்த மார்ச் 7-ம் தேதி வெளியிடப்பட்டது. அதில் மார்ச் 14-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் எனவும், ஏப்ரல் 26 வரை விண்ணப்பிக்க அவகாசமும் வழங்கப்பட்டது. தற்போது ஆகஸ்ட் 25 முதல் 31-ம் தேதி வரையுள்ள தேதிகளில் தாள் 1-க்கு மட்டும் முதற்கட்டமாக தேர்வுகள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. தேர்வு கால அட்டவணை, அனுமதிச்சீட்டு வழங்கும் விவரம் ஆகஸ்ட் 2-ம் வாரம் அறிவிக்கப்படும்’’ என்று கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மதுரை அரசு ராஜாஜி தலைமை மருத்துவமனையில் மழை நீரில் படுக்கைகள் நனையும் அவலம்

Arivazhagan Chinnasamy

அவங்க இல்லாததுதான் தோல்விக்கு காரணம்: தோனி

Halley Karthik

கிறிஸ்துவ பெண் இந்து முறைப்படி வேத மந்திரங்கள் முழங்க தாலி கட்டி திருமணம்

Arivazhagan Chinnasamy