வாடிவாசல் படப்பிடிப்பு எப்போது? வெளியான அசத்தல் அப்டேட்!

வாடிவாசல் படப்பிடிப்பு அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் சென்னையில் தொடங்க உள்ளதாக இப்படத்தின் தயாரிப்பாளர் எஸ். தாணு கூறியுள்ளார். சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான கங்குவா திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அந்த வகையில், கார்த்திக்…

Wadivasal update released!

வாடிவாசல் படப்பிடிப்பு அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் சென்னையில் தொடங்க உள்ளதாக இப்படத்தின் தயாரிப்பாளர் எஸ். தாணு கூறியுள்ளார்.

சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான கங்குவா திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அந்த வகையில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ என்ற திரைப்படத்தில் நடிகர், சூர்யா நடித்து முடித்துள்ளார் . இப்படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியானது. அடுத்தாக, ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார்.நடிகர், சூர்யா இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வெற்றிமாறன் விடுதலை 2 படப்பிடிப்பில் தீவிரமாக இருந்தார்.

இந்நிலையில், வாடிவாசல் திரைப்படத்தின் பணிகள் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் சென்னையில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. படத்திற்கான பணிகளை லண்டனில் மேற்கொள்ளப்பட்டு வரும் அனிமேஷன் இறுதிக்கட்டத்தில் உள்ளன, என இப்படத்தின் தயாரிப்பாளர் எஸ். தாணு கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.