#YezhuKadalYezhuMalai படத்தின் டிரெய்லர் எப்போது?

ராம் இயக்கத்தில் நிவின் பாலி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் டிரெய்லர் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

When is the trailer of the movie #YezhuKadalYezhuMalai?

ராம் இயக்கத்தில் நிவின் பாலி, அஞ்சலி, சூரி நடித்திருக்கும் திரைப்படம் ‘ஏழு கடல் ஏழு மலை’. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இத்திரைப்படத்திற்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். மாநாடு படத்தைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் இப்படத்தை தயாரிக்கிறார்.

இந்த படத்தின் பணிகள் நிறைவடைந்த நிலையில் இந்தாண்டு தொடக்கத்தில் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அதன் பின்னர் ரஷ்யாவின் மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அந்த இரண்டு விழாக்களிலும் இந்த படத்துக்கு நல்ல வரவேற்பும் பாரட்டுகளும் கிடைத்தன.

இதனைத் தொடர்ந்து டிரான்சில்வேனியா திரைப்பட விழாவுக்கு இந்த படம் தேர்வு செய்யப்பட்டது. ஜனவரி மாதம் இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டதைத் தொடர்ந்து இணையத்தில் இக்காட்சிகள் பரவலாக பேசப்பட்டன. ராமின் முதல் படமான ‘கற்றது தமிழ்’ பாணியில் காட்சிகள் அமைக்கப்பட்டதாக கருத்துக்களை பகிர்ந்தனர்.

இதன் பின்னர் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றன. இப்படம் வரும் பிப்ரவரி மாதம் வெளியாக உள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், இப்படத்தின் டிரெய்லர் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி,  ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் டிரெய்லர் வரும் ஜனவரி 20ம் தேதி வெளியாகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.