இயக்குநர் ஜித்து ஜோசப் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடிப்பில் உருவான ‘த்ரிஷ்யம்’ படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, அப்படத்தின் 3ம் பாகத்தின் படப்பிடிப்பு குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
மோகன்லால் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவான ’த்ரிஷயம்’ திரைப்படம் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியாகி பெரிய வெற்றியை பெற்றது. இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்பட பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. குறிப்பாக தமிழில் முன்னணி நடிகர் கமல்ஹாசன் கௌதமி நடிப்பில் ’பாபநாசம்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு 2015-ம் ஆண்டு வெளியானது. மேலும் இந்த படம் 100 கோடி ரூபாய் வசூலைத் தொட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ’த்ரிஷயம்’ படத்தின் இரண்டாவது பாகம் கடந்த 2021-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியானது. தெலுங்கு கன்னடம் ஹிந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட இந்த படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. ’த்ரிஷயம்’ படத்தின் இரண்டாவது பாகம் தமிழில் மட்டும் ரீமேக் செய்ய காலதாமதமாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது ’த்ரிஷயம் 3’ படத்தை உருவாக்க ஜித்து ஜோசப் திட்டமிட்டுள்ளார். முதல் பாகத்தில் நடித்த மோகன்லால் மற்றும் மீனா மூன்றாம் பாகத்திலும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த படத்தை ஒரே நேரத்தில் மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் அந்தந்த பிரபல நடிகர்களை வைத்து இயக்க இருப்பதாகவும், ஒரே நாளில் அனைத்து மொழிகளிலும் ’த்ரிஷயம் 3’ படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் மலையாளம், ஹிந்தியில் ஒரே நேரத்தில் 2024-ம் படப்பிடிப்பு நடத்தப்படுமென தகவல் வெளியாகியுள்ளது. ஏனெனில் திரில்லர் படங்களில் சுவாரஸ்யம் முக்கியம் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.







