#Raayan படத்தின் OTT ரிலீஸ் எப்போது ? – வெளியான புதிய அப்டேட்!

ராயன் திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் ஓடிடி ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு வெளி வந்த ‘பா. பாண்டி’ திரைப்படத்தின் மூலம் நடிகர் தனுஷ் இயக்குநராக…

When is the OTT release of #Raayan ? - New update released!

ராயன் திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் ஓடிடி ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு வெளி வந்த ‘பா. பாண்டி’ திரைப்படத்தின் மூலம் நடிகர் தனுஷ் இயக்குநராக அறிமுகமானார். இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து தனுஷின் இயக்கத்தில் இரண்டாவது உருவான திரைப்படம் ‘ராயன்’. இந்த திரைப்படத்தில் அவரே கதாநாயகனாகவும் நடித்துள்ளார். தனுஷின் 50-வது படமாக உருவாகியுள்ள ‘ராயன்’ திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த திரைப்படத்தில் துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடித்துள்ளனர். கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.  இந்த திரைப்படம் கடந்த 26ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இதையும் படியுங்கள் :  #Ayodhya ராமர் கோயில் பாதைகளில் ரூ.50லட்சம் மதிப்பிலான புரொஜெக்டர் விளக்குகள் திருட்டு – உ.பி காவல்துறை விசாரணை!

இத்திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  இந்நிலையில், இப்படம் உலகளவில் ரூ.150 கோடி வசூலித்துள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. தனுஷ் நடித்த படங்களிலேயே இதுவே பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமாக மாறியுள்ளது.

இந்த நிலையில் ராயன் திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ராயன் படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் வாங்கியுள்ளது. மேலும் இத்திரைப்படம் ஆக்ஸ்ட் 30 தேதி ஓடிடியில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.