#KanguvaTrailer | கங்குவா ட்ரெயிலருக்கு நீங்கள் பொழிந்து வரும் அன்பிற்கு ரொம்ப நன்றி -சிறுத்தை சிவா நெகிழ்ச்சி!

கங்குவா ட்ரெயிலருக்கு நீங்கள் பொழிந்து வரும் அன்பிற்கு ரொம்ப நன்றி என இயக்குநர் ‘சிறுத்தை’ சிவா தெரிவித்துள்ளார்.   பிரபல இயக்குனர் “சிறுத்தை” சிவா இயக்கத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா நடித்துள்ள திரைப்படம்…

Thank you so much for all the love you've been showering on Kangua Trailer -Siruthai Shiva Leshichi!

கங்குவா ட்ரெயிலருக்கு நீங்கள் பொழிந்து வரும் அன்பிற்கு ரொம்ப நன்றி என இயக்குநர் ‘சிறுத்தை’ சிவா தெரிவித்துள்ளார்.  

பிரபல இயக்குனர் “சிறுத்தை” சிவா இயக்கத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா நடித்துள்ள திரைப்படம் ‘கங்குவா’. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்தப் படம் 3டி முறையில் ஒரு சரித்திர படமாக உருவாகியுள்ளது. 10 மொழிகளில் வெளியாக உள்ள ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடந்து வருகின்றன. இந்தத் திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 10-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில், இயக்குனர் சிவாவின் பிறந்தநாளை முன்னிட்டு ‘கங்குவா’ படத்தின் டிரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டனர். வனத்திற்குள் வாழ்ந்த பழங்கால மனிதர்கள், அவர்களின் தோற்றம், போர்க்காட்சிகள் என்று பல இடங்களில் அனிமேஷன் மற்றும் விஎப்எக்ஸ் பணிகள் சிறப்பாக வந்துள்ளன.

தற்போது, வெளியாகியுள்ள டிரெய்லரின் இறுதியில் குதிரையில் வரும் ஒருவரை பார்த்து சூர்யா சிரிக்கிறார். ஆனால் அந்த நபரின் முகத்தை டிரெய்லரில் படக்குழுவினர் காட்டவில்லை. அது நடிகர் கார்த்தியாகவே இருக்க வேண்டும், என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், “கங்குவா ட்ரெயிலருக்கு நீங்கள் பொழிந்து வரும் அன்பிற்கு ரொம்ப நன்றி. மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டதைப்போல உணர்கிறேன். ரசிகர்களிடம் இருந்து ஆதரவு பெருகியுள்ளதால் படக்குழு மகிழ்ச்சி” என இயக்குநர் ‘சிறுத்தை’ சிவா தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.