‘ராயன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது? வெளியான லேட்டஸ்ட்  அப்டேட்! 

‘ராயன்’ இசை வெளியீட்டு விழா நாளை மறுநாள் (ஜூலை 6) சென்னையில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  நடிகர் தனுஷின் 50-வது திரைப்படமாக உருவாகும் ‘ராயன்’ திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.  இந்த திரைப்படத்தை தனுஷே…

‘ராயன்’ இசை வெளியீட்டு விழா நாளை மறுநாள் (ஜூலை 6) சென்னையில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

நடிகர் தனுஷின் 50-வது திரைப்படமாக உருவாகும் ‘ராயன்’ திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.  இந்த திரைப்படத்தை தனுஷே எழுதி,  இயக்கி,  நடித்து வருகிறார்.  இந்த திரைப்படத்தில் துஷாரா விஜயன்,  சந்தீப் கிஷன்,  காளிதாஸ் ஜெயராம்,  எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படம் வடசென்னையை கதைக்களமாக கொண்டு உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  கடந்த டிசம்பர் மாதம் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக தனுஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்திருந்தார்.  இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.  இத்திரைப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றது.

இந்த திரைப்படம் ஜூலை 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, இந்த படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நாளை மறுநாள் (ஜூலை 6) பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதாக இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.