2021-22-ம் கல்வியாண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு 2-ம் பருவ பொதுத்தேர்வு முடிவுகள் தாமதமாகி வருவதால் மாணவர்கள் எப்போது முடிவுகள் வரும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தாமதமாகும் பொதுத்தேர்வு முடிவுகளால் மாணவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.
2021-22-ம் கல்வியாண்டில் 2 கட்டமாக நடைபெற்ற பொதுத்தேர்வின் முடிவுகளை நாடு முழுவதும் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளிடம் இருந்து சேகரிப்பதால் பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ அதிகாரிகள் தெரிவித்தனர். மிக விரைவில் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று சிபிஎஸ்இ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு 2-ஆம் பருவ தேர்வு முடிவுகளை இன்று 10 மணிக்கு வெளியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
CBSE 2ம் பருவ தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் அறிவிக்கப்படும். ஆனால் இந்த முறை காலதாமதம் ஆகியுள்ளது. இன்னும் தேதி மற்றும் நேரம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதும், மாணவர்கள் CBSE முடிவுகளை cbseresults.nic.in, results.gov.in, digilocker.gov.in மற்றும் பிற இணையதளங்களில் பார்க்கலாம்.
சிபிஎஸ்இ 2ஆம் பருவ 10ஆம் வகுப்புக்கான தேர்வுகள் ஏப்ரல் 26ஆம் தேதி முதல் மே 24ஆம் தேதி வரையிலும், 12ஆம் வகுப்புத் தேர்வுகள் ஏப்ரல் 26ஆம் தேதி முதல் ஜூன் 15ஆம் தேதி வரையிலும் நடைபெற்றன.








