ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் 3வது பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக வெளியான ‘பிரதர்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள திரைப்படம் ‘காதலிக்க நேரமில்லை’. இதில், ஜெயம் ரவியுடன் இணைந்து நித்யா மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.
இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இப்படம் காதலை மையப்படுத்தி வித்தியாசமாக உருவாக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த திரைப்படத்தின் முதல் பாடலான ‘என்னை இழுக்குதடி’ பாடல் கடந்த நவ.22ம் தேதி வெளியாகி வைரலானது. விவேக் எழுதிய இப்பாடலை ஏ. ஆர். ரஹ்மான் மற்றும் தீ பாடி இருந்தனர். இப்படத்தின் 2வது பாடலான ‘லாவெண்டர் நேரமே’ பாடல் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில் இப்படத்தின் 3வது பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
https://x.com/RedGiantMovies_/status/1875153883842179140
அதன்படி, இப்படத்தின் 3வது பாடலான ‘இட்ஸ் பிரேக் அப்டா’ பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இப்போஸ்டரில் நித்யா மேனன் கையில் சுத்தியுடம் காட்சியளிக்கிறார். இத்திரைப்படம் வரும் பொங்கலை முன்னிட்டு வரும் ஜன.14ம் தேதி வெளியாகவுள்ளது.








