ஜோதிகா, சசிகுமார் நடித்த ‘உடன்பிறப்பே’ படத்தின் 2பாகம் எப்போது?

ஜோதிகா, சசிகுமார் நடித்த ‘உடன்பிறப்பே’ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இதன் இரண்டாம் பாகத்தை இயக்குநர் இரா.சரவணன் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம், த.செ.ஞானவேல் இயக்கிய ‘ஜெய்…

ஜோதிகா, சசிகுமார் நடித்த ‘உடன்பிறப்பே’ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இதன் இரண்டாம் பாகத்தை இயக்குநர் இரா.சரவணன் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம், த.செ.ஞானவேல் இயக்கிய ‘ஜெய் பீம்’, இரா.சரவணன் இயக்கத்தில் சசிகுமார், ஜோதிகா நடித்த ‘உடன்பிறப்பே’, சாரோ சண்முகம் இயக்கத்தில் அருண் விஜய், அர்ணவ் விஜய் நடித்த ‘ஓ மை டாக்’, அரிசில் மூர்த்தி இயக்கத்தில் ரம்யா பாண்டியன், வாணி போஜன் நடித்த  ‘ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்’ ஆகிய படங்களை தயாரித்தது.

இயக்குநர் இரா.சரவணன் இயக்கத்தில் சசிகுமார் மற்றும் ஜோதிகா இணைந்து நடித்திருந்த இப்படம், அண்ணன் தங்கை பாசத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருந்தது. இப்படம் திரையரங்குகளில் வெளியாமல் நேரடியாக  அமேசான் பிரைம் ஓடிடியில் தளத்தில் வெளியான உடன்பிறப்பே கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் சசிகுமாரின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது.

இந்த நிலையில், இப்படத்தின் இயக்குநர் இரா.சரவணன் உடன்பிறப்பே படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கத் திட்டமிட்டுள்ளாராம். இதற்காக, ஜோதிகாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. நடிகை ஜோதிகா நடிப்பில் இறுதியாக வெளியான காதல் தி கோர், சைத்தான் படங்கள் அவருக்கு பெரிய வரவேற்பைப் பெற்றுத்தந்த நிலையில் உடன்பிறப்பே படத்தின் இரண்டாம் பாகம் குறித்து ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.