ஜெயிலர் இசை வெளியீட்டு விழா எப்போது ? – வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!

ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கி  நடிகர் ரஜினிகாந்த் தற்போது டப்பிங் பேசி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. திரைப்படத்தை, நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜெயிலர்…

ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கி  நடிகர் ரஜினிகாந்த் தற்போது டப்பிங் பேசி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

திரைப்படத்தை, நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜெயிலர் எனப் பெயர் வைக்கப் பட்டுள்ளது. நெல்சனின் முந்தைய படங்களுக்கு இசையமைத்த அனிருத் இப்படத்திற்கும் இசையமைக்கிறார்.

ஏற்கனவே ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட, தர்பார் போன்ற படங்களுக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இவ்விரு படங்களின் பாடல்களும், பின்னணி இசையும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், அனிருந் இந்த படத்தில் என்ன செய்திருப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது.

இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த்துடன், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், சுனில், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் , நடிகை ஆத்மிகா, தமன்னா என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடிது வருகிறது.

படத்தின் ஷூட்டிங் சென்னை, மங்களூரு என்று நடந்து வரும் நிலையில், 100 நாள் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஜெயில் கதைக்களம் என்பதால் ஓய்வுபெற்ற ஜெயிலராக, முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தற்போது வரை 70 சதவீத படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இடம்பெறும் பெரும்பாலான காட்சிகள் படமாக்கி முடிக்கப்பட்டு விட்டன. சமீபத்தில் மங்களூருவில் ரஜினி – சிவராஜ்குமார் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

இப்படத்தைத் தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஜெயிலர் படம் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. அதன் படி ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி ஜெயிலர் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்த நிலையில் ஜெயிலர் படத்தின் ஜெயிலர் படத்தின் முதல் பாடல் ஜூன் மாதத்திலும், இசை வெளியீட்டு விழா ஜூலையில் நடைபெறவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளன. அத்துடன் ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன. நடிகர் ரஜினிகாந்த் தற்போது டப்பிங் பேசி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.