‘ஜப்பான்’ டீசர் தொடர்ந்து 30 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. முதல் படமான பருத்திவீரனில் ஆரம்பித்து சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் வரை தனது படங்களில் வெவ்வேறு விதமான கதாபாத்திரங்களை ஏற்று அவரது ரசிகர்களை குதூகலப்படுத்தி வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் கடந்தாண்டு மூன்று படங்கள் அடுத்தடுத்து வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.
இதனையடுத்து தற்போது குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸி உள்ளிட்ட படங்களை இயக்கி வெற்றிபெற்ற இயக்குனரான ராஜு முருகனின் இயக்கத்தில், ஜப்பான் படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. கார்த்தியுடன் அனு இமானுவேல், இயக்குநர் விஜய் மில்டன் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
கார்த்தி தனது 25வது படமான ஜப்பான் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட நான்கு மொழிகளில் வெளியாக உள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தினை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
https://twitter.com/DreamWarriorpic/status/1662423415058251777?s=20
ஜப்பான் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
கார்த்தி பிறந்த நாளையொட்டி ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக ஜப்பான் பட டீசரை படக்குழு வெளியிட்டது. ‘ஜப்பான்’ மேட் இன் இந்தியா போன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ள இந்த டீசர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி, இந்த டீசர் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து 30 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.








