பயம் முடியும்போது வாழ்க்கை தொடங்குகிறது: ’மாடர்ன் லவ் சென்னை’ புகழ் வாமிகா கெபி நெகிழ்ச்சி!

’மாடர்ன் லவ் சென்னை’ தொடர் நடிகை வாமிகா கெபி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் வைரல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். நடிகை வாமிகா கெபி ஹிந்தி படங்களில் நடித்து பிரபலமானவர். இவர் 2016-ம் ஆண்டு…

’மாடர்ன் லவ் சென்னை’ தொடர் நடிகை வாமிகா கெபி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் வைரல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகை வாமிகா கெபி ஹிந்தி படங்களில் நடித்து பிரபலமானவர். இவர் 2016-ம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ”மாலை நேரத்து மயக்கம்” எனும் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். பின்னர் நீண்ட வருடங்களுக்குப் பிறகு தமிழில் 2023-ம் ஆண்டு ‘மாடர்ன் லவ் சென்னை’ தொடரில் தியாகராஜன் குமாரராஜா இயக்கிய ‘நினைவோ ஒரு பறவை’ படத்தில் நடித்தார்.

இவர் ஹிந்தி, பஞ்சாபி மொழி படங்களில் அதிகம் நடித்து வருகிறார். அண்மையில் இவரது நடிப்பில் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியான ‘ஜூப்ளி’ இணையத் தொடரில் அற்புதமாக நடித்திருந்தார். மேலும் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியான ‘சார்லி சோப்ரா’ எனும் தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.

வாமிகா கெபி தற்போது ஜெயம் ரவியுடன் ‘ஜீனி’ படத்தில் நடித்து வருகிறார். இவர் எஸ்.ஜே.சூர்யாவுடன் நடித்துள்ள ‘இரவாக்காலம்’ படம் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது. இவர் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் தனது வாழ்கையில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளை பகிர்ந்து வருவது வழக்கம். அது சில சமயங்களில் வைரலாகவும் உருவெடுக்கும்.

https://www.instagram.com/p/CvFIZZvr5XE/?img_index=1

இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “பயம் முடியும்போது வாழ்க்கை தொடங்குகிறது” எனப் பதிவிட்டு தனது புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் ஹார்டின்களையும் தீ எமோஜிக்களையும் பதிவிட்டு வருகின்றனர். இன்ஸ்டாகிராமில் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.