28.9 C
Chennai
September 27, 2023
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

2024ல் JEE, NEET, CUTE தேர்வுகள் எப்போது?

2024-ம் ஆண்டுக்கான முக்கிய நுழைவுத் தேர்வுகள் குறித்த தகவல்களை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

தேசிய தேர்வு முகமை நடத்தும் முக்கிய தேர்வாகப் பார்க்கப்படுவது JEE தேர்வு. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் இந்தியாவில் உள்ள IIT, NITகளில் சேர முடியும். அந்த வகையில், 2024-ம் ஆண்டு JEE முதன்மைத் தேர்வு ஜனவரி மாதம் மூன்றாம் வாரத்தில் நடைபெறும் என்றும், இரண்டாவது தேர்வு ஏப்ரல் மாதம் இரண்டாவது வாரத்தில் நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதேபோல் க்யூட் தேர்வு 2024-ம் ஆண்டு மே மாதம் முதல் வாரத்தில் நடைபெறும் எனவும், இளநிலை நீட் தேர்வு மே மாதம் 5-ம் தேதி நடைபெறலாம் எனவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், 2024 – 25-ம் ஆண்டுக்கான நுழைவுத் தேர்வுகள் குறித்த அட்டவணையை என்டிஏ விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை, என்டிஏ அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மாணவர்கள் அறிந்து கொள்ள முடியும்.

மேலும் JEE நுழைவுத் தேர்வுக்கான தேதிகள் அடுத்த வாரம் வெளியிடப்படலாம்  என எதிர்பார்க்கப்படுகிறது. நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பங்களும் விரைவாகவே தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்கள் அல்லது தேர்வுகள் குறித்து jeemain.nta.nic.in அல்லது nta.ac.in தளங்களில் அறியலாம். நீட் 2023-ம் ஆண்டு மே 7-ம் தேதி நீட் தேர்வு நடைபெற்ற நிலையில், 2024-ம் ஆண்டு மே 5ஆம் தேதி நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

பேருந்து நிலையத்திற்குள் புகுந்த மழைநீர் – கழிவுநீரும் கலந்து வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி!

Web Editor

கடன் தொல்லையால் மகனை அடகு வைத்த தந்தை

Gayathri Venkatesan

சிக்ஸ் பேக் உடன் வேற லெவல் லுக்கில் சூர்யா– இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் போட்டோ…

Web Editor