வங்கிகள் உயர்த்தும் வட்டி சதவிகிதம் எவ்வளவு தெரியுமா?

ரிசர்வ் வங்கி கடந்த 8-ஆம் தேதி ரெப்போ ரேட் விகிதத்தை உயர்த்தியது. இதனால், வங்கிகள் உடனடியாக கடனுக்கான வட்டியை உயர்த்தியுள்ளன. எந்த வங்கி எவ்வளவு வட்டியை உயர்த்தியுள்ளது என்பதை விளக்குகிறது இந்த தொகுப்பு. யானை வரும் பின்னே, மணியோசை வரும்…

ரிசர்வ் வங்கி கடந்த 8-ஆம் தேதி ரெப்போ ரேட் விகிதத்தை உயர்த்தியது. இதனால், வங்கிகள் உடனடியாக கடனுக்கான வட்டியை உயர்த்தியுள்ளன. எந்த வங்கி எவ்வளவு வட்டியை உயர்த்தியுள்ளது என்பதை விளக்குகிறது இந்த தொகுப்பு.

யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே, என்பதற்கு ஏற்ப, ரிசர்வ் வங்கியின் வட்டி விகித உயர்வு அறிவிப்புக்குக் காத்திருந்த வங்கிகள். உடனடியாக வாடிக்கையாளர்களுக்கு  வழங்கும் கடனுக்கான வட்டியை உயர்த்தியுள்ளன. கடந்த மாதம் இந்திய ரிசர்வ் வங்கி  திடீரென ரெப்போ ரேட் எனப்படும் , ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான, வட்டி விகிதத்தினை 40 புள்ளிகள் அதிகரித்து, இனி ரெப்போ ரேட் 4.40 சதவீதமாக இருக்கும் என்று அறிவித்தது. இதற்குத் தான் காத்திருந்தது போல பல வங்கிகள், வாடிக்கையாளர்களுக்கு வழங்கும்,கடனுக்கான வட்டியை உயர்த்தின. இதனிடையே ஜூன் மாதம் 8-ஆம் தேதி, மீண்டும் ,ரெப்போ ரேட் விகிதத்தை 50 புள்ளிகள் அதிகரித்து . 4.90% இருக்கும் என அறிவித்தார் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ்.

2 ஆண்டு கொரோனா பெருந்தொற்று கால பொது முடக்கத்திலிருந்து, மீண்டு வந்த மக்களுக்குப் பேரிடியாக அமைந்து விட்டது ரிசர்வ் வங்கியின் தொடர் வட்டி உயர்வு அறிவிப்பு. ஒவ்வொரு வங்கியும் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளன. இனி எந்த வங்கி எவ்வளவு வட்டியளவை உயர்த்தியுள்ளது என்பதைப் பார்க்கலாம்

தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி EBLR எனப்படும் கடனுக்கான வட்டி விகிதத்தினை 8.10 சதவீதத்திலிருந்து, 8.60 சதவீதமாக உயர்த்தியுள்ளது.  பொதுத்துறை  வங்கியான பேங்க் ஆஃப் இந்தியா, அதன் RBLR  எனப்படும் கடனுக்கான வட்டி விகிதத்தினை 7.75 சதவீதமாக உயர்த்தியுள்ளது. அதே போல் பொதுத்துறை வங்கிகளான பேங்க் ஆஃப் பரோடாவும் , பஞ்சாப் நேசனல் வங்கியும், RLLR எனப்படும் கடனுக்கான வட்டி விகிதத்தினை 50 புள்ளிகள் அதிகரித்துள்ளன. இதன் படி கடனுக்கான வட்டி விகிதம், 6. 9 சதவீதத்திலிருந்து, 7.40 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இன்னும் பல பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் அடுத்த சில நாட்களில் , கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்த தயாராகி வருவதாக வங்கியியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

அண்மைச் செய்தி: ‘10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்த அஞ்சல் துறை அதிகாரி; பரிதவித்த பெண்’

மற்றொரு புறம் ஆறுதல் செய்தியாக, வங்கிகள், வாடிக்கையாளர்களிடமிருந்து பெறும் டெபாசிட் பணத்திற்கான வட்டியையும் சிறிதளவு உயர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன. தனியார் வங்கியான கோடக் மஹிந்திரா வங்கியானது, 50 லட்சத்திற்கும் அதிகமான டெபாசிட்டுகளின் வட்டியை 3.5 லிருந்து 4சதவீதமாக அதிகரித்துள்ளது. அத்துடன் குறுகியகால டெபாசிட் பணத்திற்கான வட்டியளவும். 10 முதல் 15 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

வரும் நாட்களில் பெரும்பாலான வங்கிகள் கடனுக்கு வசூலிக்கும் வட்டியும், டெபாசிட்டுக்கு வழங்கும் வட்டியும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு என்றால் . மக்கள் நேர் மறையான அறிவிப்புகள் வரும் என எதிர்பார்த்த காலம் முடிவுக்கு வந்து விட்டது என்றால் மிகையில்லை

– ரா.தங்கபாண்டியன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.