இலங்கை வீரர்களை பலப்பரீட்சை செய்தது, இந்திய அணியா இல்லை முகமது சிராஜா? எல்லோரின் பாராட்டுகளுக்கும் சான்றாக சிராஜ் நிகழ்த்திய அற்புதம் என்ன? Investigate Mohammed Siraj இல் பார்க்கலாம்.
2023, செப்டம்பர் 17 கடல் கடந்த இலங்கையில் கதி களங்க செய்தது இந்தியாவில் உருவான ஒரு சூறாவளி….
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இலங்கையின் கொழும்புவை தாக்கிய அந்த சூறாவளி, இலங்கை மக்களின் இதயத் துடிப்பை இரட்டிப்பாக்கியது தான் மேல்…
நிஜம் தான்…ஆனால் எந்த சேதமும் கண்ணில் படவில்லையே என்று கேள்வி கேட்பவர்களுக்கெல்லாம் கொழும்பு மைதானத்தின் 24 யார்ட்ஸ் பௌலிங் டிராக் தான் பதில் சொல்லும்…
ஆம்….அந்த சூறாவளியின் பெயர் தான் வேகமும், வெறித்தனமும் ஒரே உருவாக கொண்ட முகமது சிராஜ். ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் அதிரடியாக பந்து வீசி, இந்திய அணியின் வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்கு வித்திட்டவர் சிராஜ். இரண்டு நாட்கள் மழை இல்லாத போது பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளமாக இருக்கக் கூடும் என்ற முனைப்பில், இலங்கை கேப்டன் தசுன் ஷானாகா பேட்டிங் தேர்வு செய்ய, பந்துவீச்சுக்கு ஆயத்தமானது இந்திய அணி. கடந்த சில வாரங்களாகவே ஆசிய கோப்பை என்றாலே, மழை குறுக்கீடுதான் நினைவுக்கு வந்திருக்கக் கூடும். எதிர்பார்த்தது போலவே மழை குறுக்கிட்டது. ஆனால் நீண்ட நேரம் தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்தாத மழை, அடுத்ததாக ஒரு சுறாவளிக்கான எச்சரிக்கையை இலங்கை அணிக்கு கொடுத்து சென்றிருந்ததோ, இல்லையோ.. போட்டி தொடங்கிய மறு கனமே நிகழ்த்த தொடங்கி விட்டார் சிராஜ். இதில் “பிராக்டிக்கல் டாக்” என்னவென்றால், கேப்டன் ரோகித் சர்மா என்னவோ, கீ பவுளராக ஜாஸ்பிரித் பும்ராவை நினைத்திருந்திருக்கக் கூடும்… ஆனால் மைதானத்தின் 24 யார்ட்ஸ் களத்திற்கும், சிராஜிற்குமான இடைவெளி, நல்ல கெமிஸ்டரியை கொடுக்க, தனது இரண்டாவது ஓவரிலேயே அற்புதங்களை நிகழ்த்தினார் சிராஜ்.
முதல் விக்கெட்டை எடுத்து விக்கெட் எண்ணிக்கையை தொடங்கியது வேண்டுமானால் பும்ராவாக இருந்திருக்கலாம்.. ஆனால், அதன் பின் அதன் எண்ணிக்கைகளை கூட்டியது என்னவோ, சிங்கக் குட்டி சிராஜ் தான். இந்திய அணியின் நான்காவது ஓவரின் முதல் பந்தை பதும் நிசாங்காவிற்கு வீசிய சிராஜ், நல்ல லெங்த் பந்தாக டெலிவரி செய்த மறு கனமே, அதனை Drive ஆட நினைத்த நிசாங்கா, பீல்டிங் மன்னன் ரவீந்திர ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்தார். நொடி பொழுதில் பந்தை தாவி பிடித்து, Soft Reaction மட்டுமே கொடுத்து அசால்ட்டாக அடுத்த பந்துக்கு தயாரானார் ஜடேஜா. நான்காவது ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை இழந்த இலங்கை அடுத்த அடியை நம்பகத்தன்மை வாய்ந்த சதீரா சமரவிக்ரமா மூலம் எடுத்து வைத்தது. அவர் தனது முதல் பந்தை டாட் செய்தாலும், அடுத்த பந்தை அக்ராசில் ஆட முயற்சி செய்தார். நல்ல லெங்த்தில் போடப்பட்ட பந்து என்பதால் LBW இல் மாட்டிக்கொண்டார் சதீரா.நடுவர் ரிச்சர்ட் இல்லிங்வர்த், இந்திய அணியினர் அப்பீல் செய்ததும் தனது ஒற்றை விரலை தூக்கிய நிலையில், DRS முயற்சிக்கு சென்ற சதீராவிற்கு கிடைத்த முடிவு என்னவோ அவுட் மட்டும் தான். 8 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் என்ற மோசமான நிலையில் பெவிலியன் திரும்பினார் சதீரா. அங்கிருந்தாவது இன்னிங்ஸை தொடங்கலாம் என்ற எண்ணத்துடன் களம் இறங்கி அடுத்த பந்தை எதிர்கொண்ட புது பேட்ஸ்மேன் அசலங்கா, சிராஜின் 4 ஆவது பந்தை மணிக்கு 135 கிலோ மீட்டர் வேகத்தில் எதிர்கொண்டார். நல்ல டைமிங் இருந்தாலும் வேகத்தை உணராத அசலங்கா, டிரைவ் ஆட முயற்சி செய்தார். கேப் பாத்து தட்டிவிடலாம் என்று நினைத்த அசலங்காவிற்கு Forward திசையில் நின்று கொண்டிருந்த இஷான் கிஷன் சர்ப்ரைஸ் அதனை எளிமையான கேட்ச்சாக பிடித்து சர்ப்ரைஸ் கொடுத்தார்.
சிராஜின் வேகத்திற்கு ஆடுகளம் மட்டும் துணை போகவில்லை, இந்திய வீரர்களும் அடுத்தடுத்து FIRE மோடில் தான் இருந்திருந்தார்கள் என்றே சொல்லலாம். தனது அக்கவுண்டில் 3 விக்கெட்டுகளை வைத்திருந்த முகமது சிராஜ், அதே உத்வேகத்தில் அந்த ஓவரின் கடைசி பந்தை தனஞ்ஜெயாவுக்கு 3 ஸ்லிப்களை வைத்து, லைனில் கொஞ்சம் Wide கொடுத்து, OUT ஸ்விங்கர் பந்து ஒன்றை போட்டார். அதனை சுலபமாக டிரைவ் ஆட முயற்சி செய்த தனஞ்ஜெயாவின் பேட்டில் இருந்து லேசான Edge பட்ட மறுகனமே, கே.எல்.ராகுல் கைகளுக்குள் தஞ்சம் அடைந்தது அந்த பந்து. சொல்லவா வேண்டும், சிராஜுக்கு நான்காவது விக்கெட் என்றால், இந்திய அணிக்கு அது 5 ஆவது விக்கெட். துள்ளி குதித்து கொண்டாட ஆரம்பித்தது இந்திய அணி. ஆனால் பரிதாபகரமான நிலையில் இருந்தது இலங்கை அணியினர் மட்டுமல்ல, இலங்கை ரசிகர்களும் தான்.சிராஜின் வேகம் அதோடு நின்றுவிடவில்லை. அடுத்ததாக தனது 3வது ஓவரை இலங்கை கேப்டன் தசுன் ஷானகாவிற்கு வீசிய சிராஜ், முதல் மூன்று பந்துகளை டாட் செய்து ஷானகாவை எச்சரித்தார். மூன்று ஸ்லிப் ஃபீல்டர்கள், ஒரு Backward, ஒரு Forward, பீல்டர்களுக்கு மத்தியில் சிராஜின் இன்கம்மிங் டெலிவரியை எதிர்கொண்ட இலங்கை கேப்டன் அதனை ON டிரைவ் ஆட முயன்றார். ஆனால் அது அவுட் ஸ்விங்கர் பந்து என்பதால் Middle Stump க்கு பிட்ச் ஆகி, நல்ல சீம் நகர்வுகளுடன் OFF Stump-ஐ பதம் பார்த்தது. இலங்கையின் ஒட்டுமொத்த நம்பிக்கையுமே அங்கே பறிபோனது என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் சமீபத்திய போட்டிகளில் இலங்கையின் இக்கட்டான சூழல்களை இலங்கைக்கு SAFER சைடாக மாற்றியவரே தசுன் ஷானகா தான்.
ஆனால் அணியின் ஸ்கோரோ 12 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் என்ற சூழலில், ஒரு 100 ரன்களாவது எட்டி விடலாம் என்று நினைத்த இலங்கை கேப்டனின் விக்கெட்டுக்கு பின் எட்டியது என்னமோ விக்கெட் எண்ணிக்கை மட்டுமே. அப்புறம் என்ன கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ஃபேவரெட் Celebration Siuuuuuu போன்றே நிகழ்த்திக்காட்டினார் சிராஜ். அத்துடன் அவரது 5 விக்கெட் Haul ம் நிறைவானது. ஆனால் அதே வேகத்துடன் தனது 6 ஆவது ஓவரை வீச வந்த முகமது சிராஜ், இலங்கை அணியின் இதயமான குஷால் மெண்டிஸின் Middle Stump ஐ பதம் பார்த்தார். ஷானகாவிற்கு போடப்பட்டது போன்ற பந்துதான் குஷால் மெண்டிஸுக்கும் போட்டார் சிராஜ். ஆனால் அது ஒரு In Swinger டெலிவரி என்பதை கணிக்காமல் விளையாடிய Settle பேட்ஸ்மேன் குஷால் மெண்டிஸ், டிரைவ் ஆட முயற்சி செய்த போது அது அவரது Middle Stump ஐ அடித்தது. Batக்கும், Padக்கும் இடையேயான இடைவெளியை கடந்து சென்ற அந்த பந்தை மெண்டிஸுக்கு கணிக்க கூட நேரம் இருந்திருக்குமா என தெரியவில்லை. அதோடு சிராஜ் தனது 6வது விக்கெட்டை தன் அக்கவுண்டில் ரீசார்ஜ் செய்துக் கொண்டார். பொதுவாகவே முகமது சிராஜ் என்றால் ரிதம் செட் ஆனால் மட்டுமே அவரால் அற்புதங்களை நிகழ்த்திட முடியும் என்ற விமர்சனங்களுக்கு அடிக்கடி உள்ளாவது வழக்கம். ஆனால் ரிதம் செட் ஆனால் அங்கே நடப்பவை எல்லாம் ஒரு Magician புரியாத புதிரை போலவே நிகழச் செய்திடுவார். அதே போல தான் இலங்கை அணியினருக்கும், இலங்கை ரசிகர்களுக்கும் அங்கு நடந்தது என்னவென்றே தெரியவில்லை. போட்டி தொடங்கிய 12 ஆவது ஓவரிலியே அனைத்தும் மாயை ஆனது. சரியாக 15.2 ஆவது ஓவரில் ஒருநாள் போட்டிகளில் தனது 2 ஆவது குறைவான ஸ்கோரை பதிவு செய்து வெளியேறியது இலங்கை அணி.
இதற்கு முன்னதாக இதே இலங்கை அணியுடன் கடந்த ஜனவரி மாதம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் சிராஜ் ஆடிய ருத்ரதாண்டவத்தால் 4/32 என துவம்சம் செய்தார். அதில் இருந்தே மீளாத இலங்கையை, அவர்களது சொந்த மண்ணிலேயே உடைத்து எறிந்தார் முகமது சிராஜ். இது சிராஜின் ஒருநாள் கிரிக்கெட் கரியரில் முதல் 6 விக்கெட் Haul ஆகும். மேலும் எதிரனியை குறைந்த பந்துகள் மட்டுமே வீசி 3.00 எகனாமியில் பந்துவீசி திணறடித்திருக்கிறார் சிராஜ். எப்போதுமே தனக்கான வாய்ப்பை துடிப்போடு பயன்படுத்திக்கொள்ளும் சிராஜுக்கு, உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக இப்படி ஒரு உத்வேகமான அனுபவம், இந்திய அணியின் இந்த Pace பேட்டரிக்கு கூடுதல் Charge உடன் உழைக்கத் தோன்றும். இந்த இளம் நட்சத்திரத்தின் மறக்க மற்றும் மறுக்க முடியாத ஒரு சாதனையாக இது என்றும் தொடரும் என்றே சொல்லலாம்.
– நந்தா நாகராஜன், ஸ்போர்ட்ஸ்.