பாமகவின் புதிய தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், கட்சி பணிகளை வளர்ப்பது மற்றும் 2026-ம் ஆண்டு ஆட்சியை பிடிப்பதற்கான உத்திகளை வகுப்பது உள்ளிட்டவைகள் குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
பாமக தலைவராக பொறுப்பேற்றுள்ள அன்புமணி ராமதாஸ், கவுரவ தலைவர் ஜி.கே. மணி ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அன்புமணி ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூடி தன்னை பாமக தலைவராக தேர்ந்தெடுத்தார்கள் என்றார். பொறுப்பேற்ற பின் தமிழகத்தின் மூத்த தலைவர்களை சந்தித்து வாழ்த்துக்களை பெற்று வருகிறேன் என அன்புமணி கூறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தலைவராக பொறுப்பேற்ற பின்பு, ராமதாஸ் தொடங்கிய 34 அமைப்புகளின் செயலாளர்களுடன் இன்று உரையாடல் நடந்ததாக குறிப்பிட்டார். இந்த கூட்டத்தில் பாமக 2.0 செயல் திட்டம் சம்பந்தமான உத்திகள் குறித்து கலந்துரையாடல் நடைபெற்றதாக கூறினார். இந்த அடிப்படையில் அடுத்த 4 ஆண்டு காலம் பாமக வின் செயல் திட்டம் இருக்கும் ங்கள் அணுகுமுறை, தமிழகத்தின் முதன்மை பிரச்சினைகள் மற்றும் அடுத்த தலைமுறை சார்ந்த நோக்கம், சமூக நீதி சார்ந்த பிரச்சினைகள் உள்ளிட்டவைகளைனிறுத்தி இருக்கும்.
காலையிலே முதலமைச்சரை சந்தித்த போது, இரண்டு செய்திகளை அவரிடம் தெரிவித்தேன். ஒன்று – உடனடியாக முதலமைச்சர் தலைமையில், மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள் மற்றும் சட்டமன்ற அனைத்து கட்சி தலைவர்களும் கூடி தமிநாட்டில் எப்படி போதை பழக்கத்தை ஒழிக்கலாம் என ஆலோசனை நடத்த வேண்டும் என்றேன். குறிப்பாக பள்ளி மாணவர்கள், கஞ்சா ஹெராயின் போன்ற போதை பழக்கங்களுக்கு அடிமையாகி உள்ளார்கள்இன்று தமிழ் நாட்டில் எந்த இடத்திற்கு சென்றாலும், போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இவை ஒழிக்கப்பட வேண்டும், காவல் துறைக்கு தெரியாமல் எதுவும் நடக்காது இதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
கடந்த மாதம் கூட 4,500 பேரை கைது செய்ததாக அறிவித்திருந்தது, அவர்கள் அனைவரும் வெளி வந்துவிடுவார்கள் இதுபோன்ற போதை பொருள் பயன்படுத்துபவர்கள் மீது குண்டர் சட்டம் பாய வேண்டும். இரண்டாவது – தமிழ்நாட்டில் மதுவை ஒழிக்கவேண்டும் தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளும் மது ஒழிப்பை அறிவித்திருக்கிறார்கள் உண்மையிலேயே மதுவிலக்கு அமல் படுத்தப்படுமா என தெளிவு படுத்த வேண்டும். இன்னும் நான்கு ஆண்டுகளில் அவற்றை எப்படி ஒழிப்பது என்பது குறித்து தமிழ்நாடு அரசு தெளிவு படுத்த வேண்டும் என அன்புமணி கூறினார்.
இனி வரும் காலங்களில் அதிகரித்து வரும் வெப்பம் காரணமாகவும், கால நிலை மாற்றம் காரணமாகவும் அதிக அளவில் அகதிகள், சென்னைக்கு வந்து கொண்டு இருக்கிறார்கள். கிராமத்தில் நீர் இல்லை, விவசாயம் இல்லை என்பதால், நகரத்தை நோக்கி பிழைக்க வந்து கொண்டிருக்கிறார்கள். எனவே அதற்கான திட்டமிட வேண்டும், காற்று மாசு, தூய காற்று கொள்கையை குறித்து வரும் ஜூன் மாதம் 5 ஆம் தேதி பாமக சார்பில் ஒரு ஆவனைத்தினை வெளியிட உள்ளோம்.
ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக தினமும் 2 இளைஞர்கள் உயிரை மாய்த்துக் கொண்டு உள்ளனர். இதில் குறிப்பாக நடுத்தர வர்க்கம், அரசு இதற்காக உடனடியாக ஒரு சட்ட திருத்தத்தை கொண்டு வர வேண்டும். பாசன திட்டங்களுக்கு கால நிலை நாற்றதின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். 5 முக்கிய ஆறுகள், தென்பெண்ணை, பாலாறு, தாமிரபரணி, வைகை உள்ளிட்ட ஆறுகளில் தடுப்பணை கட்டுவது கொள்ளிடம் ஆற்றில், வேலங்குடி பகுதியில் ஒரு தடுப்பணை கட்ட வேண்டும் என முதலமைச்சரிடம் தெரிவித்து உள்ளதா அவர் கூறினார்.
ஆதனூர் பகுதியில் கட்டப்பட்டு வரும் தடுப்பணைக்கு இன்னும் 100 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி பேசினேன், 10.5 விழுக்காடு மீண்டும் நிறைவேற்றி தர வேண்டும் முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்தேன். முதலமைச்சர் மீண்டும் சட்ட சிக்கல் ஏற்படாமல் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார். தமிழ்நாட்டில் இரு பெரிய சமுதாயங்கள், ஒன்று தாழ்த்தப்பட்ட சமுதாயம் இன்னொன்று வன்னியர் சமுதாயம் இரண்டும் சேர்ந்தால் 40% இந்த 40% உயர்ந்தால் தமிழ்நாடு வளர்ச்சி அடையும்.
உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கும், ஜாதிவாரி கணக்கெடுப்புக்கும் சம்பந்தமே கிடையாது. 10.5 விழுக்காட்டிற்கும் சாதிவாரி கணக்கெடுப்பிற்கு எந்த சம்பந்தமும் கிடையாது. இந்தியாவிலேயே அதிகமாக மது விற்பனை செய்யும் மாநிலம் தமிழ்நாடு இது மிகவும் கேவலமானது. உத்தரபிரதேச மாநிலத்தில் மக்கள் தொகை அதிகமாக உள்ளது அங்கே 12,000 கோடிக்கு தான் மது விற்பனை செய்ய படுகிறது. ஆனால் இங்கே 40,000 கோடிக்கு மது விற்பனை செய்ய படுகிறது என அன்புமணி சுட்டிக்காட்டினார்.
இந்தியாவிலேயே அதிக விதவைகள் இருக்கும் மாநிலம் தமிழ்நாடு, இந்தியாவிலேயே அதிக சாலை விபத்துகள் நடப்பது தமிழ்நாடு அதற்கு காரணம் தமிழ்நாட்டில் பல கொலைகள் மதுவால் தான் ஏற்படுகிறது. பெண்கள் பள்ளி சீருடை அணிந்து மதுவை குடிக்கின்ற காட்சிகள், நாம் அமெரிக்காவில் பார்க்கவில்லை, தமிழகத்தில் பார்க்கிறோம் என வேதனை தெரிவித்தார். அரசாங்கம் தமிழகத்தை காப்பாற்ற வேண்டும் என்றால், திமுக நிறுவனர் கொள்கைக்கு இணங்க படி படியாகவாது மதுவிலக்கு ஏற்படுத்துங்கள. உங்கள் தேர்தல் வாக்குறுதியை நீங்கள் நிறைவேற்றுங்கள் அது அடுத்த தலைமுறையை காப்பாற்றும் என்றார்.
பாமக 2.0 கடந்த 3 மாதங்களுக்கு முன்பே தொடங்கியுள்ளதாக குறிப்பிட்ட அன்புமணி ராமதாஸ், தற்போது 120 மாவட்ட செயலாளர்கள் பொறுப்பேற்று உள்ளார்கள் அதில் 90% இளைஞர்கள் தான்கட்சியின் தலைமை நேரடியாக மாவட்ட செயலாளர்கள் மற்றும் ஒன்றிய நிர்வாகிகளை தேர்வு செய்து வருகிறது. கட்சியின் வளர்ச்சியில் தொண்டர்கள் சரியாக செயல்படவில்லை என்பதை ஒப்புக் கொள்கிறேன். அதேபோல் தானும் ஒரு தொண்டன் தான் தானும் சரியாக செயல்படவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன் என்றார்.
அடுத்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் கூட்டணி இல்லாமல் யாரும் ஆட்சிக்கு வர முடியாது எங்களுடைய இலக்கு 2026-ல் ஆட்சியில் அமர வேண்டும், அது தனித்தோ அல்லது கூட்டணியாகவோ இருக்கலாம். மக்கள் மனதில் கடந்த 15 ஆண்டுகளாக ஒரு மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற எண்ணம் இருக்கிது. இப்போது பணத்தை வைத்து, காசு கொடுத்து அரசியல் செய்ய வேண்டிய சூழல் உள்ளது. பண அரசியலை முறியடித்து பல மாற்றங்கள் உருவாக்கப்படும் எங்கள் மீது திணிக்கப்பட்ட ஒரு பெயர், அது திணிக்கப்பட்ட பெயர், உண்மையல்ல தமிழ்நாட்டில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்ய வைத்தது பாமக தான் 16 ஆண்டுகள் நாங்கள் நிழல் அறிக்கை வெளியிட்டதை அடுத்து, அரசாங்கம் கடந்த ஆண்டு அதனை நடைமுறை படுத்தியது என அன்புமணி தெரிவித்தார்.
எல்லா சமுதாயத்திற்காக சமூக நீதி அடிப்படையில் தொடங்கப்பட்ட கட்சி பாமக பாட்டாளி மாடல் வேறு, பாமக 2.0 வேறு. தான் டெல்லி அரசியலில் இல்லை, எனது நோக்கம் தமிழ்நாடு அரசு தான் தமிழ்நாட்டில் குறைவான குறைகள் இருக்கின்ற கட்சி எங்கள் கட்சி தான் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.