நடிகர் சூர்யா தனது மனைவி ஜோதிகா, மகள் தியா, மகன் தேவ் ஆகியோருடன் மும்பையில் இருப்பதாக கூறப்பட்ட நிலையில் சூர்யா தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
சூர்யா தற்போது சிவா இயக்கத்தில் ’கங்குவா’ படத்தில் நடித்து வருகிறார். ஸ்டுடியோ கிரீன் சார்பாக பிரமாண்டமாக தயாராகி வரும் இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். பாலிவுட் நடிகை தீஷா பதானி இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும் தனது சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக தயாரிக்கவிருக்கும் படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் நடிகர் சூர்யா தனது மனைவி ஜோதிகா, மகள் தியா, மகன் தேவ் ஆகியோருடன் மும்பையில் இருப்பதாக கூறப்பட்டது. மும்பையில் சூர்யாவின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. அப்போது தனது குழந்தைகளை புகைப்படம் எடுக்க வேண்டாம் என பத்திரிகையாளர்களிடம் கோரிக்கைவிடுத்தது இணையத்தில் வைரலாக பரவியது.
இதன் ஒரு பகுதியாக நடிகர் சூர்யா மும்பையில் ரூ.70 கோடி மதிப்பில் சொந்த வீடு வாங்கியிருப்பதாகவும், தனது மகளின் மேற்படிப்புக்காக இந்த வீடு வாங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில், சூர்யா ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்போது தான் மும்பையில் செட்டில் ஆகவில்லை என்றும், தனது மகன் மற்றும் மகள் ஆகியோர் படிப்பிற்காக அங்கே இருக்கிறார்கள் அவ்வளவுதான் என கூறி இருக்கிறார்.







