டேவிட் வார்னர் கொடுத்த கேட்சை பத்திரானா கேட்ச் பிடித்த வீடியோ வைரலாகி வருகிறது.
ஐபிஎல் தொடரின் 13வது போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒய்.எஸ். ராஜசேகர் ரெட்டி மைதானத்தில் தொடங்கியது. ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணி இதில் களமிறங்கியது. சென்னை அணி இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வென்று, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது. அதேநேரம், டெல்லி அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியுற்று புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில் இன்றைய போட்டிக்கான டாஸை வென்று டெல்லி கேப்பிடல்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. டேவிட் வார்னர் மற்றும் பிரித்வி ஷா இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்துள்ளது. இதனையடுத்து சென்னை அணிக்கு 192 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
https://twitter.com/IPL/status/1774450716569936069
இதில் நிதானமாக தொடங்கி பின்னர் அதிரடியாக விளையாடிய டேவிட் வார்னர், 32 பந்துகளில் ஐபிஎல் கிரிக்கெட்டில் தனது 62ஆவது அரைசதம் அடித்தார். இந்த ஜோடி 9 ஓவர்கள் முடிவில் 91 ரன்கள் எடுத்திருந்த நிலையில், முஷ்தாபிஜூர் ரஹ்மானின் 9.3வது ஓவரின் போது டேவிட் வார்னர் ஸ்வீப் ஷாட் அடிக்க முயற்சித்தார். அப்போது லெக் ஸ்லிப் திசையில் பீல்டிங்கில் நின்றிருந்த மதீஷா பதிரனா பாய்ந்து சென்று ஒரு கையால் கேட்ச் பிடித்தார். இதற்கு தோனி கை தட்டி பாராட்டு தெரிவித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.







