களைகட்டிய நிச்சயதார்த்தம் –  பாடல் பாடி அசத்திய பிரேம்ஜி – இந்து!

திருத்தணியில் நடைபெற்ற திருமண நிச்சயதார்த்த விழாவில் பிரேம்ஜி மற்றும் மணமகள் இந்து பாட்டு பாடி அசத்தினர்.  நடிகராகவும் இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் பிரேம்ஜி.  இவர் சென்னை 28, மங்காத்தா,  கோவா,  மாஸ்,  சேட்டை உள்ளிட்ட…

திருத்தணியில் நடைபெற்ற திருமண நிச்சயதார்த்த விழாவில் பிரேம்ஜி மற்றும் மணமகள் இந்து பாட்டு பாடி அசத்தினர். 

நடிகராகவும் இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் பிரேம்ஜி.  இவர் சென்னை 28, மங்காத்தா,  கோவா,  மாஸ்,  சேட்டை உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  கடைசியாக சத்திய சோதனை படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.  வெங்கட் பிரபு – அஷோக் செல்வன் கூட்டனியில் வெளியான மன்மத லீலை படத்தில் இசையமைப்பாளராக பணியாற்றியிருந்தார்.

தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில்  உருவாகும் கோட் படத்தில் நடித்து வருகிறார்.  இதனிடையே,  சில தினங்களுக்கு முன்னர் நடிகர் பிரேம்ஜியின் திருமண அழைப்பிதழ் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகியது.  தொடர்ந்து, பிரேம்ஜியின் அண்ணன் வெங்கட் பிரபு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தம்பியின் திருமண அப்டேட்டை கொடுத்தார்.

அதன்படி, நடிகர் பிரேம்ஜிக்கு – இந்து என்ற பெண்ணுடன் திருத்தணி முருகன் கோயிலில் இன்று திருமணம் நடைபெற உள்ளது.  இதனிடையே,  திருத்தணியில் உள்ள தனியார் ஹோட்டலில் பிரேம்ஜி – இந்து இருவருக்கும் நேற்று திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

 

இவ்விழாவில் மணமகள் இந்துவின் உறவினர்கள்,  பிரேம்ஜியின் உறவினர்கள் மற்றும் சென்னை 28 திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  இவ்விழாவில் பிரேம்ஜி மற்றும் மணமகள் இந்து இணைந்து சினிமா பாடல் பாடி அசத்தினர்.  அப்போது அங்கிருந்தவர்கள் கைத்தட்டி பாராட்டு தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.