எரிபொருட்கள் விலையேற்றத்தை குறிக்கும் வகையில் நாமக்கல் அருகே நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில், மணமக்களுக்கு சிலிண்டர், பெட்ரோலை பரிசு பொருட்களாக வழங்கியுள்ளனர்.
நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக, பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்கள், விலை ஏற்றத்தை சந்தித்து வருகிறது. இதனால், பெட்ரோல், டீசல் விலை மற்றும் சமையல் ஏரிவாயு விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும், என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், விலை ஏற்றத்தை சுட்டிக் காட்டும் விதமாக, நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் நடைபெற்ற நவீன், சங்கமேஷ்வரி ஆகியோரின் திருமண நிகழ்ச்சியில், மணமகனின் நண்பர்கள் சிலிண்டர், பெட்ரோலை பரிசாக வழங்கி உள்ளனர். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.







